2024 நாடாளுமன்றத் தேர்தலில் உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் ராகுல் காந்தி இன்று (மே 3) வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ரேபரேலி, அமேதி தொகுதிகள் காங்கிரஸ் கட்சியின் பாரம்பரிய தொகுதிகளாக உள்ளன. இந்த தொகுதிகளில் நேரு-காந்தி குடும்பத்தினர் தொடர்ந்து போட்டியிட்டு வருகின்றனர்.
வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் மே 3 ஆம் தேதி என அறிவிக்கப்பட்ட நிலையில்… நேற்று இரவு வரை இத்தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் காங்கிரஸ் தலைமையால் அறிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில் இன்று (மே 3) அதிகாலை, ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் சார்பாக ராகுல் காந்தி போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
அமேதி தொகுதியில் கிஷோரி லால் சர்மா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, ராகுல் காந்தி இன்று (மே 3) ரேபரேலி தொகுதியில் வேட்புமனுத்தாக்கல் செய்தார்.
#WATCH | Uttar Pradesh: Congress MP Rahul Gandhi files nomination from Raebareli for the upcoming #LokSabhaElection2024
BJP has fielded Dinesh Pratap Singh from Raebareli. pic.twitter.com/R0IYOCnJA1
— ANI (@ANI) May 3, 2024
ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல் செய்த போது, காங்கிரஸ் நாடாளுமன்றத் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெல்லாட் மற்றும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
வேட்பு மனு தாக்கல் செய்த கையோடு மகாராஷ்டிர மாநிலம் புனேவில் இன்று மாலை நடைபெறும் பொதுக்கூட்டத்துக்காக புறப்பட்டார் ராகுல் காந்தி. அவரது சகோதரி பிரியங்கா காந்தி அமேதி, ரேபரேலி உள்ளிட்ட தொகுதிகளில் தீவிர பரப்புரை மேற்கொண்டிருக்கிறார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
உதவாத அபாய சங்கிலி : ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த 7 மாத கர்ப்பிணி பலி!
பிளஸ் 2 ரிசல்ட்: தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கோரிய பள்ளிக்கல்வித்துறை