அசாமில் நடைப்பயணத்தின் போது கோவிலுக்குள் செல்ல காவல்துறையினர் மறுப்பு தெரிவித்ததால் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தர்ணாவில் ஈடுபட்டார். Rahul Gandhi engaged in dharna
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நீதி பயணத்தை மணிப்பூர் மாநிலத்தில் இருந்து கடந்த ஜனவரி 14 ஆம் தேதி தொடங்கினார்.
தொடர்ந்து மணிப்பூர், நாகாலாந்து ஆகிய மாநிலங்களை கடந்து பாஜக ஆளும் மாநிலமான அசாமில் ராகுல் காந்தி நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
ஆனால் ராகுல் காந்தியின் நடைப்பயணத்திற்கு பாஜகவினர் பல்வேறு விதமான இடையூறுகளை அளித்து வருவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது.
குறிப்பாக அசாம் மாநிலத்தின் லக்கிம்பூரில் போஸ்டர்கள் மற்றும் பேனர்களை பாஜக தொண்டர்கள் கிழித்ததாகவும், வாகனங்களை சேதப்படுத்தியதாகவும் காங்கிரஸ் குற்றம்சாட்டியது.
இந்த நிலையில் இன்று காலை ராகுல் காந்தி அசாமின் போர்டுவா மாவட்டத்தில் நடைப்பயணம் சென்று கொண்டிருந்த போது படாதிரவாதான் கோவிலுக்கு சென்ற போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தினர்.
அப்போது ராகுல் காந்தி, “கோவிலுக்குள் செல்ல முடியாத அளவிற்கு நான் என்ன குற்றம் செய்தேன்” என்று கேள்வி எழுப்பினார். இதற்கு அயோத்தியில் ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை முடிந்த பிறகு தான் கோவிலுக்குள் அனுமதிக்க முடியும் என்று காவல்துறையினர் பதிலளித்தனர்.
அதற்கு ”நாங்கள் எந்த பிரச்சனையும் செய்ய வரவில்லை. அமைதியான முறையில் பிரார்த்தனை செய்ய தான் வந்தோம்” என்று ராகுல் காந்தி கோவிலின் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். ராகுல் காந்தியுடன் காங்கிரஸ் கட்சியினரும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தர்ணாவில் ஈடுபட்டவர்கள் ரகுபதி ராகவ ராஜாராம் பாடலை பாடினர்.
https://twitter.com/INCIndia/status/1749292073633653056?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1749292073633653056%7Ctwgr%5E9b3e69273d42bd31083114781e4f4fab4e3f5b5b%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftamil.news18.com%2Fnational%2Frahul-gandhi-stopped-from-entering-temple-in-assam-1317175.html
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “இன்று ஒருவர் மட்டும் தான் கோவிலுக்கு செல்ல முடியும். கோவிலுக்கு யார் செல்ல வேண்டும்? எப்போது செல்ல வேண்டும் ? என்று பிரதமர் மோடி தான் முடிவு செய்ய வேண்டுமா?” என்று கேள்வி எழுப்பினார். இதனால் கோவிலின் முன்பு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
ஆசமனம், பவித்ரம்: ராமர் சிலையை பிரதிஷ்டை செய்த மோடி
”என்னை மன்னித்து விடுங்கள்” பிக்பாஸ் ஐஷு உருக்கம்!
Rahul Gandhi engaged in dharna