அவதூறு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனைக்கு தடை கோரிய ராகுல் காந்தியின் மனு மீது குஜராத் உயர்நீதிமன்றம் நாளை (ஜூலை 7) தீர்ப்பளிக்க உள்ளது.
கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மோடி என்ற சமூகப்பெயர் குறித்து ராகுல்காந்தி விமர்சித்ததாக கூறி அவர் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் கடந்த மார்ச் மாதம் ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது சூரத் நீதிமன்றம்.
இதன்காரணமாக அவர் பிரதிநிதித்துவச் சட்டத்தின் விதிகளின்படி வயநாடு எம்.பி பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.
இதற்கிடையே தனது தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார் ராகுல்காந்தி. அந்த மனு கடந்த சில மாதங்களாக விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
இந்த தீர்ப்பு ராகுல்காந்திக்கு சாதமாகும் பட்சத்தில், அவர் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக செயல்பட வழிவகுக்கும். அதே நேரத்தில் 2 ஆண்டு தண்டனை உறுதி செய்யப்படும் பட்சத்தில் ராகுல்காந்தி சிறைக்கு செல்வதோடு, வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் போட்டியிட முடியாத சூழ்நிலை உருவாகும். ஆனால் தீர்ப்பு தனக்கு எதிராக இருந்தால் ராகுல் காந்தி அதை எதிர்த்து மேல் முறையீடு செய்ய அவருக்கு சட்ட வாய்ப்புள்ளது.
இதனால் வழங்கப்பட உள்ள தீர்ப்பு எப்படி இருந்தாலும் மிகப்பெரிய அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தும்.
கிறிஸ்டோபர் ஜெமா
எனக்கு 92 வயதானாலும்… டெல்லியில் பதிலடி கொடுத்த சரத்பவார்
தாம்பரம் காவல்துறையில் தடாலடி மாற்றம்: தயார் நிலையில் டிஜிபி