ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை ஜூலை 21ஆம் தேதி விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் இன்று (ஜூலை 18) தெரிவித்துள்ளது.
மோடி சமூகம் குறித்து அவதூறாகப் பேசியதாகக் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை நிறுத்தி வைக்கக் குஜராத் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இதை எதிர்த்துக் கடந்த ஜூலை 15ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனு இன்று (ஜூலை 18) விசாரணைக்கு வந்த போது மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜராகி, இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
ஜூலை 21ஆம் தேதி அல்லது ஜூலை 24ஆம் தேதி விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதைக் கேட்ட தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட், வரும் 21ஆம் தேதி இந்த மனுவை விசாரணைக்குப் பட்டியலிடுமாறு உத்தரவிட்டார்.
இதனிடையே ராகுல் காந்தி மீது சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடர்ந்த பூர்ணேஷ் மோடி உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் ராகுல் காந்தி வழக்கில் தங்கள் தரப்பு வாதத்தையும் கேட்ட பிறகே உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
நீதிமன்றம் விதித்த தண்டனையின் காரணமாக ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா
தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டம்… உண்மை பலம் என்ன?
உற்சாக வரவேற்பளித்த மியாமி… கடும் நெருக்கடியில் மெஸ்ஸி