பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறு பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து குஜராத் சூரத் நீதிமன்றம் இன்று (மார்ச் 23) தீர்ப்பளித்துள்ளது.
2019-ஆம் ஆண்டு கர்நாடகா கோலார் பகுதியில் மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி பேசியபோது, “நிரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என அனைத்து திருடர்களும் மோடியின் குடும்ப பெயராக வைத்திருக்கிறார்கள்” என்று பேசியிருந்தார்.
இதனை தொடர்ந்து ராகுல் காந்தியை கைது செய்யக்கோரி பாஜக சட்டமன்ற உறுப்பினர் புர்னேஷ் குமார் குஜராத் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு ஹெச்.ஹெச்.வர்மா இன்று தீர்ப்பு வழங்கினார். இதற்காக இன்று காலை சூரத் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி ஆஜரானார்.
ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து மாஜிஸ்திரேட்டு ஹெச்.ஹெச்.வர்மா உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து ராகுல் காந்தி வேண்டுகோளின் பேரில் அவருக்கு ஜாமீன் வழங்கி 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்ய அவரது தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
செல்வம்
மீண்டும் 44 ஆயிரத்தைக் கடந்த தங்கம் விலை!
தேசிய பங்குச்சந்தை பட்டியல்: வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சாதனை!