ராகுல் காந்தி எம்.பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து தனது ட்விட்டர் பயோவில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.பி என்று மாற்றியுள்ளார்.
மோடி பெயர் குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அவதூறாக பேசியதாக குஜராத் சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு மார்ச் 23-ஆம் தேதி 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து ராகுல் காந்தி எம்.பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் இன்று (மார்ச் 26) சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பயோவில் எம்.பி என்று குறிப்பிட்டிருந்ததை தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.பி என்று மாற்றியுள்ளார்.
முன்னதாக ராகுல் காந்தி தனது ட்விட்டர் பயோவில் காங்கிரஸ் கட்சி உறுப்பினர், எம்.பி என்று குறிப்பிட்டிருந்தார்.
ராகுல் காந்தி தனது ட்விட்டர் பயோவை மாற்றியுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியினர் ட்விட்டரில் அதனை அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.
செல்வம்
ராகுல் தகுதிநீக்கம்: தடையை மீறி காங்கிரஸ் சத்தியாகிரக போராட்டம்!