அமேதியில் போட்டியா?: மௌனம் கலைத்த ராகுல் காந்தி

Published On:

| By Kavi

அமேதியில் போட்டியிடுவது தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேட்டி அளித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் 7 கட்டமாக நடைபெறவிருக்கும் நிலையில் முதல் கட்ட தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் உட்பட நாடு முழுவதும் 102 தொகுதிகளில் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.

வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்காக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

எனினும் ராகுல் உத்தரப்பிரதேசத்தில் உள்ள அமேதி தொகுதியில் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பும்  தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதலே இருந்து வருகிறது.

காங்கிரஸ் கட்சி வலுவாக இருந்த தொகுதி அமேதி. ஆனால் 2019 தேர்தலில் இந்த தொகுதியில் பாஜகவைச் சேர்ந்த ஸ்மிருதி இராணி வெற்றி பெற்று ராகுல் காந்திக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

அமேதி தொகுதியைப் பொறுத்தவரை இந்த முறையும் பாஜக சார்பில் ஸ்மிருதி இரானி தான் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுவிட்டது.

ஆனால், காங்கிரஸ் இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை. வயநாட்டில் ராகுல் போட்டியிடும் நிலையில், அங்கு வாக்குப்பதிவு முடிந்த பிறகே அமேதி தொகுதிக்கு வேட்பாளர் அறிவிக்கக் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன.

இந்நிலையில் இன்று (ஏப்ரல் 17) ராகுல் காந்தி மற்றும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் இருவரும் உத்தரப் பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது, ’இந்த முறை அமேதியில் போட்டியிடுவீர்களா?’ என ராகுல் காந்தியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், “இதுதொடர்பாக கட்சி முடிவு செய்யும். கட்சி தலைமை என்ன உத்தரவிட்டாலும் அதை நான் செய்வேன்” என்று கூறியுள்ளார்.

மேலும் அவர்,”15- 20 நாட்களுக்கு முன்பு இந்த தேர்தலில் பாஜக 180 இடங்களை வெல்லும் என்று நினைத்திருந்தேன், ஆனால் இப்போது அக்கட்சி 150 இடங்களில் தான் வரும் என்று நினைக்கிறேன். ஒவ்வொரு தொகுதியிலும் காங்கிரஸின் பலம் அதிகரித்து வருகிறது” என்று தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

‘ஆசை ஆசையாய்’ பட நடிகையை ஞாபகம் இருக்கா?.. இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க!

அனுமதி இல்லாமல் விளம்பரம் வெளியிட்ட பாஜகவுக்கு நோட்டீஸ்: சத்யபிரதா சாகு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment