மீண்டும் எம்.பி ஆனார் ராகுல் காந்தி

Published On:

| By Jegadeesh

மோடி சமுதாயம் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

இதை எதிர்த்து ராகுல் காந்தி குஜராத் உயர் நீதிமன்றத்துக்கு சென்றார்.

ஆனால் ராகுல் காந்தியின் சிறை தண்டனையை  நிறுத்தி வைக்க குஜராத் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இதை எதிர்த்து ராகுல் காந்தி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை ஆகஸ்ட் 4 ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், நரசிம்மா, சங்சய் குமார் அமர்வு,  ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்தது.

உச்சபட்ச தண்டனைக்கான எந்த காரணங்களும் இல்லாததால் தண்டனையை நிறுத்திவைப்பதாக  நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில், உச்சநீதி மன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை ரத்து செய்து எம்.பி பதவி மீண்டும் வழங்கப்படுவதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது.
இச்சூழலில் ராகுல்காந்தி இன்று நாடாளுமன்றம் செல்ல வாய்ப்புள்ளது.

முன்னதாக எம்.பி. பதவி ராகுல் காந்திக்கு எப்போது வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

மார்பக புற்றுநோய்: அங்காடித் தெரு’ சிந்து காலமானார்!

கலைஞர் நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share