நாடாளுமன்றத்தில் ராகுல் அட்டாக்: தலையில் கைவைத்த நிர்மலா சீதாராமன்

அரசியல்

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அல்வா தயாரிக்கும் புகைப்படத்தை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி காட்ட முயற்சித்தபோது, சபாநாயகர் ஓம் பிர்லா எதிர்ப்பு தெரிவித்தார்.

நாடாளுமன்ற பட்ஜெட்டின் மீதான உரையில் இன்று (ஜூலை 29) பேசிய ராகுல் காந்தி, “பட்ஜெட்டில் வேலைவாய்ப்பு திட்டம் குறித்து நிர்மலா சீதாராமன் பேசினார்.

இது ஒரு ஜோக். ஏனென்றால் இன்டர்ன்ஷிப் திட்டம் நாட்டின் சிறந்த 500 நிறுவனங்களில் இருக்கும் என்று நீங்கள் சொன்னீர்கள்.

99 சதவிகித இளைஞர்களுக்கு இந்தத் திட்டத்தில் எந்தத் தொடர்பும் இல்லை. அதாவது முதலில் காலை உடைத்துவிட்டு பிறகு கட்டு போடுகிறீர்கள்.

வேலையில்லாத் திண்டாட்டம், வினாத்தாள் கசிவு என்ற பிரச்சனையை உருவாக்கியுள்ளீர்கள் என்பதுதான் உண்மை.

இன்றைக்கு இளைஞர்களுக்கு வினாத்தாள் கசிவுதான் மிகப்பெரிய பிரச்னையாக இருந்தாலும், பட்ஜெட்டில் அது குறித்து விவாதிக்கப்படவில்லை. மேலும் கல்விக்கான பட்ஜெட்டைக் குறைத்துள்ளீர்கள்” என்றார்.

தொடர்ந்து பட்ஜெட்டுக்கு முன்னர் நிர்மலா சீதாராமன் அல்வா தயாரிக்கும் புகைப்படத்தை காட்ட முயன்றபோது சபாநாயகர் ஓம் பிர்லா எதிர்ப்பு தெரிவித்தார்.

அப்போது பேசிய ராகுல் காந்தி, “நான் என்ன புகைப்படத்தைக் காட்ட விரும்புகிறேன் என்பதைக் கூட கவனிக்காமல் சன்சத் டிவியை அணைக்கிறீர்கள்” என்று சபாநாயகரிடம் தெரிவித்தார்.

மேலும், “நாட்டின் பட்ஜெட் தயாரிக்கும் பணியை இருபது அதிகாரிகள் செய்துள்ளனர். இந்த இருபது பேரில் ஒருவர் மட்டுமே சிறுபான்மையினர் மற்றொருவர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்” என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.

ராகுல் காந்தியின் இந்த பேச்சைக்கேட்ட நிர்மலா சீதாராமன், தலையில் கைவைத்தபடி இறுக்கமான முகத்துடன் அமர்ந்திருந்தார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

அதானி A1, அம்பானி A2: நாடாளுமன்றத்தில் போட்டுத்தாக்கிய ராகுல்

பெயர் மாற்றப்பட்ட ராஷ்டிரபதி பவனின் அறைகள்!

+1
0
+1
0
+1
1
+1
4
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *