2 ஆண்டு சிறை தண்டனைக்கு தடை விதிக்க கோரி ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சூரத் கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று(ஏப்ரல் 20) தள்ளுபடி செய்துள்ளது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது ராகுல் காந்தி மோடி பெயர் குறித்துப் பேசியதாக அவர் மீது சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் கடந்த மார்ச் 23ஆம் தேதி சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவு பிறபித்தது.
அவதூறு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட அடுத்த நாளே ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
மேலும் சிறை தண்டனை தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய ராகுல் காந்திக்கு 31 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து ராகுல் காந்தி கடந்த 3ஆம் தேதி ராகுல் காந்தி சூரத் கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில், 2 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்றும், இந்த மேல்முறையீட்டு மனு மீது தீர்ப்பு வரும் வரை சூரத் நீதிமன்றம் விதித்த 2 ஆண்டு சிறை தண்டனைக்கு இடைக்காலத் தடை விதிக்க கோரி 2 மனுக்களைத் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு விசாரணை கடந்த 13ஆம் தேதி நடைபெற்றது. இது தொடர்ந்து ராகுல் தாக்கல் செய்த மனுக்களின் மீதான தீர்ப்பு ஏப்ரல் 20ஆம் தேதிக்கு (இன்று) ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் சூரத் கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம் ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனுவை இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
சிறை தண்டனைக்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால் ராகுல் காந்திக்கு 2ஆண்டுகள் சிறை தண்டனை உறுதியாகியுள்ளது.
இதனால் அவரது எம்.பி பதவி தகுதி நீக்கமும் செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
மோனிஷா
தமிழ் பாடப்புத்தகத்தில் கருணாநிதி
பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவு: கல்வி அலுவலர்களுக்கு தேர்வுத்துறை அனுப்பிய அறிக்கை!