ராகுல் மேல்முறையீடு : ஜாமீன் நீட்டிப்பு!

Published On:

| By Kavi

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு சூரத் செஷன்ஸ் நீதிமன்றம் ஜாமீனை நீட்டித்துள்ளது.

2019ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம் கோலாரில் பிரச்சாரம் செய்த ராகுல் காந்தி, மோடி சமுதாயம் குறித்து அவதூறாகப் பேசியதாக அவர் மீது சூரத் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கில் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி ஹெச்.ஹெச்.வர்மா உத்தரவிட்டார். ராகுலுக்கு ஜாமீனும் வழங்கப்பட்டது.

இந்நிலையில் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்காக ராகுல் காந்தி தனது சகோதரி பிரியங்கா காந்தியுடன் சூரத் செஷன்ஸ் நீதிமன்றத்துக்கு வந்தார். அவர்களுடன் ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் இமாச்சல பிரதேசம் ஆகிய 3 மாநில முதல்வர்களும் வருகை தந்தனர்.

அப்போது தனக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக இரண்டு மனுக்கள் தாக்கல் செய்தார் ராகுல் காந்தி. அதில் ஒன்று தண்டனையை ரத்து செய்வது தொடர்பானது, இரண்டாவது தீர்ப்பினை ரத்து செய்வது தொடர்பானது.

இந்நிலையில் இம்மனுக்குவுக்கு ஏப்ரல் 10ஆம் தேதிக்குள் பதில் அளிக்கப் புகார்தாரரான பூர்ணேஷ் மோடிக்கு செஷன்ஸ் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

இந்த வழக்கை ஏப்ரல் 13ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதுவரை ராகுல் காந்தியின் ஜாமீனை நீட்டித்துள்ளது.
பிரியா

ஏரோப்ளேன் மோடு:  கலாஷேத்ரா ஹரிபத்மனை போலீஸ் தூக்கியது எப்படி?

கேரள ரயிலில் தீ: பயங்கரவாதிகள் சதிச்செயலா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel