ராகுலும் நிர்மலா சீதாராமனும்… இந்தியாவைக் கலக்கும் கோவையின் ’ஸ்வீட்’ அரசியல்!

அரசியல்

கோவை அன்னபூர்ணா விவகாரம் இன்று தமிழ்நாடு மட்டுமல்ல  இந்திய அளவில் ட்ரெண்டிங் டாப்பிக்காக உள்ளது.

கோவையில் தொழில் அமைப்புகளின் நிர்வாகிகள் மத்தியில் நேற்று முன்தினம் (செப்டம்பர் 11) நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துரையாடினார். அப்போது கோவையின் பிரபல ஹோட்டலான அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன் ஜிஎஸ்டி தொடர்பாக பேசியதும், பின்னர் நிர்மலா சீதாராமனை சந்தித்து மன்னிப்பு கேட்ட வீடியோவும்தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது ‘ஸ்வீட்’ அரசியல் நடந்துகொண்டிருக்கிறது. இனிப்பு என்பது திமுக- காங்கிரஸுக்கு எப்படி இருக்கிறது, பாஜகவுக்கு எப்படி இருக்கிறது என்பதுதான் அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகியிருக்கிறது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்துக்காக ஏப்ரல் மாதம் கோவை வந்த ராகுல் காந்தி, சாலையில் உள்ள சென்டர் மீடியனை தாண்டி சென்று ஒரு கடையில் ஸ்வீட் வாங்கினார்.

அதை, தனது அண்ணனான தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு  வழங்கினார். அப்போதே இந்த ஸ்வீட் வீடியோ இந்திய அளவில் டிரெண்டிங் ஆனது.

இந்த  பின்னணியில், சில நாட்களுக்கு முன்  அமெரிக்க பயணத்தில் முதல்வர் ஸ்டாலின்  சைக்கிள் ஓட்டும் வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

அதை டேக் செய்த ராகுல் காந்தி, “அண்ணா, நாம் இருவரும் சென்னையில் ஒன்றாக சைக்கிளிங் செல்வது எப்போது?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

ராகுல் காந்தியின் ட்விட்டுக்கு, “அன்பு சகோதரர் ராகுல் காந்தி அவர்களே உங்களுக்கு எப்போது ஓய்வு கிடைக்கிறதோ, அப்போது வாருங்கள் சைக்கிளிங் செல்லலாம். இருவரும் ஒன்றாக சென்னையின் முக்கிய பகுதிகளை கண்டு ரசிக்கலாம்.

எனது தரப்பில் இருந்து ஸ்வீட் பாக்ஸ் ஒன்றும் காத்திருக்கிறது. அதன்பிறகு மிகவும் சுவையான தென்னிந்திய மதிய உணவை ஸ்வீட்டுடன் எனது வீட்டில் சாப்பிடலாம்” என்று பதிவிட்டிருந்தார்.

தற்போது காங்கிரஸுக்கும் – திமுகவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், இரு கட்சியினரும் ஒன்றாகவே இருக்கின்றனர் என்பதை ராகுல் காந்தி சூசகமாக சொல்லியிருக்கிறார் என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்தனர்.

“ஸ்வீட்டை மையமாக வைத்து திமுக காங்கிரஸுக்கும் இடையே எவ்வளவு ஒரு இனிமையான, வலிமையாக கூட்டணி இருக்கிறது என்பதை இருவரும் வெளிப்படுத்தினார்கள்.

ஆனால் இதே கோவையில் இருந்து ஸ்வீட் விவகாரம் பாஜகவுக்கு இந்திய அளவில் கண்டனத்தை குவித்திருக்கிறது.   பாஜகவினருக்கும் தொழில் அமைப்புகளின் நிர்வாகிகளுக்கும் இடையே எவ்வளவு கசப்புகள் இருக்கிறது என்பதை அன்னபூர்ணா வீடியோ விவகாரம் வெளிப்படுத்திவிட்டது என்கிறார்கள் கோவை அரசியல் வட்டாரத்தில்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

வீட்டுமனை ஒதுக்கீடு வழக்கு : அமைச்சர் ஐ பெரியசாமி ஆஜராக உத்தரவு!

டிஜிட்டல் திண்ணை: ஜிலேபி முதல் மன்னிப்பு வரை… மிரட்டல், உருட்டல்! அன்னபூர்ணாவுக்கு நடந்தது என்ன?

+1
0
+1
3
+1
1
+1
4
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *