ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் இன்று (மார்ச் 27) ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டனர்.
ராகுல் காந்தி எம்.பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக நேற்று நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில், ராகுல் காந்தி விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விவாதிப்பது தொடர்பாக காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, பாரதிய ராஷ்டிரிய சமிதி, திமுக உள்ளிட்ட 16 எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டனர்
ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கருப்பு உடை அணிந்து வந்துள்ளனர்.
செல்வம்
மறைந்தார் மலையாள காமெடி சூப்பர் ஸ்டார்: யார் இந்த இன்னொசென்ட்?
பாம்பே ஜெயஸ்ரீ உடல் நலம்: முக்கிய அறிவிப்பு!