|

ராகுல் விவகாரம்: எதிர்க்கட்சிகள் அமளியால் நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!

ராகுல் காந்தி எம்.பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டதால் சில நொடிகளில் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது.

மோடி பெயர் குறித்து ராகுல் காந்தி அவதூறாக பேசியதாக அவருக்கு குஜராத் சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதனால் ராகுல் காந்தி எம்.பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்தநிலையில் ராகுல் காந்தி தகுதி நீக்க விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விவாதிப்பது தொடர்பாக இன்று காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் 16 எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து நாடாளுமன்றம் துவங்கிய சில நொடிகளில் எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை மாலை 4 மணி வரையும், மாநிலங்களவை மதியம் 2 மணி வரையும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

செல்வம்

மறைந்தார் மலையாள காமெடி சூப்பர் ஸ்டார்: யார் இந்த இன்னொசென்ட்?

ராகுல் தகுதி நீக்கம்: லண்டனில் போராட்டம்!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts