அதிமுகவை கட்டுப்பாட்டில் வைக்க எடப்பாடி படும்பாடு… : அமைச்சர் ரகுபதி விமர்சனம்!

Published On:

| By Kavi

Raghupathi has criticized Edappadi Palaniswami

அதிமுகவை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள எடப்பாடி பழனிசாமி படாதபாடு படுகிறார் என்று அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார். Raghupathi has criticized Edappadi Palaniswami

சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று (பிப்ரவரி 10) செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றி, அதிமுக உட்கட்சி விவகாரம், பெண்கள் பாதுகாப்பு ஆகியவை குறித்து பேசினார்.

அதிமுகவினரின் வாக்கு! Raghupathi has criticized Edappadi Palaniswami

“ ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி 1 லட்சத்து 15 ஆயிரத்து 709 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றுள்ளது. திமுகவின் நான்கு ஆண்டுக்கால ஆட்சியில் ஆட்சிக்கு எதிரான அலை இல்லை, ஆதரவு அலைதான் வீசுகிறது என்று இதன் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது.

2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 34 ஆயிரத்து 817 வாக்குகளை பெற்றது. அந்த வாக்குகள் அனைத்தும் திமுகவுக்கு கிடைத்திருக்கிறது.

எப்போதும் வேறு யாருக்கும் ஓட்டு போடாத மாற்றுக்கட்சிக்காரர்கள் கூட திமுகவிற்கு வாக்களித்திருக்கிறார்கள். அந்த வாக்குகள் அனைத்தும் திமுக கூட்டணிக்கு கிடைத்திருக்கிறது.

எடப்பாடி தொடர் தோல்வி! Raghupathi has criticized Edappadi Palaniswami

எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்ற பிறகு 11 முறை தோல்வி அடைந்திருக்கிறார். தொடர் தோல்வி அடைந்த ஒரு அரசியல் தலைவர் அவராகத்தான் இருக்க முடியும். இதிலிருந்து அதிமுகவை வெற்றிப்பாதையில் அழைத்துச் செல்வதற்கு அவருக்கு எந்தவிதமான தகுதியும் இல்லை என்பது நிரூபணம் ஆகி உள்ளது. அங்கு இருக்கக்கூடிய தலைவர்கள் எல்லாமே வெறுப்போடு இருக்கிறார்கள்.

பழனிசாமி, பாஜக கொண்டு வரும் திட்டங்களை மறைமுகமாக ஆதரிப்பார், வெளியில் பாஜகவை எதிர்ப்பதுபோல நடிப்பார்.

ஈரோடு கிழக்கு தேர்தல் முதல்வரின் திட்டங்களுக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது. எங்களின் திட்டங்களை பார்த்து திமுகவுக்கு வாக்களித்துள்ளார்கள் என்றால், மக்கள் திராவிட மாடல் ஆட்சியை வரவேற்கிறார்கள் என அர்த்தம்.

திமுக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் அத்திக்கடவு அவிநாசி திட்டம் முழுமையாக முற்றுப்பெற்றிருக்கிறது.

எடப்பாடி பழனிசாமிக்கு எந்த பயமும் கிடையாது என்பது தவறு, கட்சி அவரது கட்டுப்பாட்டில் இருக்கிறதா என்பதற்கு அவரின் முன்னாள் அமைச்சர்களின் பேச்சுகள் எடுத்துக்காட்டாக உள்ளது. கட்டுப்பாட்டில் கட்சியை கொண்டு வருவதற்கு படாதபாடு பட்டு கொண்டிருக்கிறார்” என்றார்.

பெண்கள் பாதுகாப்பு!

மேலும் அவர், “பெண்களுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது என்ற அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் குற்றச்சாட்டு பொய்யானது; போலியானது.

திமுக ஆட்சியில் பெண்களுக்கு தைரியம் வந்துள்ளது, தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை நீதிமன்றத்திலோ காவல் நிலையத்திலோ புகார் கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுக்கக்கூடிய காலம் இதுதான் என்பதை உணர்ந்து பெண்கள் புகார் கொடுக்க முன் வந்திருக்கிறார்கள்.

பொள்ளாச்சி சம்பவங்கள் நடந்து 14 நாள் காத்திருந்து அப்போது கூட முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவில்லை பெண்கள் அச்சப்பட்டார்கள். தற்போது, பெண்களுக்கு பலத்த பாதுகாப்பு இருக்கிறது பெண்ணுரிமை பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கையில் பெண்களுக்கு பாதிப்பு ஏற்படும் போது உடனடியாக புகார் கொடுக்க அவர்களுக்கு தைரியத்தை கொடுத்து இருக்கிறது” என பதிலளித்தார்.

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் குறித்து பேசிய அமைச்சர் ரகுபதி, “இந்து முஸ்லீம் ஒன்றாகத் தான் தமிழகத்தில் உள்ளனர். புதிதாக மதக் கலவரத்தை உருவாக்க யார் நினைத்தாலும் அதற்கு இடம் கொடுக்க மாட்டோம். நாங்கள் அனைவரையும் சமமாக பார்க்கிறோம். யாரும் யாரையும் ஏமாற்றி விட முடியாது. அந்த பிரச்சனையை எவ்வாறு சுமூகமாகத் தீர்க்க வேண்டும் என முதலமைச்சருக்கு தெரியும்” என்றார். Raghupathi has criticized Edappadi Palaniswami

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share