ராகுல் காந்தி விவகாரம்: கருப்பு சட்டையுடன் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்

Published On:

| By Monisha

ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு சட்டமன்றத்திற்குக் கருப்பு சட்டையுடன் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் வருகை இன்று (மார்ச் 27) தந்தனர்.

தமிழ்நாடு பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான 3-வது நாள் விவாதம் இன்று தொடங்குவதற்காகச் சட்டமன்றம் கூடியது. முன்னதாக, ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது மற்றும் தகுதி நீக்கம் செய்யப்பட்டது ஆகிவற்றிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று (மார்ச் 27) சட்டமன்றத்திற்குக் கருப்பு உடையுடன் வருவதற்கு காங்கிரஸ் கட்சியினர் திட்டமிட்டிருந்தார்கள்.

அதன்படி இன்று சட்டமன்ற கூட்டத்திற்குக் கருப்பு சட்டை அணிந்து, கைகளில் ராகுல் காந்திக்கு ஆதரவாகப் பதாகைகளை ஏந்திக் கொண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் வருகை தந்தனர்.

மேலும் காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்லவப்பெருந்தகை தலைமையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராகுல் காந்திக்கு ஆதரவாகவும், பிரதமர் மோடி மற்றும் பாஜகவிற்கு எதிராகவும் சட்டமன்ற வாசலில் முழக்கங்களையும் எழுப்பினர்.

சட்டமன்ற கூட்டத்தொடரில் ராகுல் காந்தி விவகாரம் தொடர்பாகப் பேசுவதற்குக் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் அப்பாவு அனுமதி வழங்கியுள்ளார்.

மோனிஷா

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!

மறைந்தார் மலையாள காமெடி சூப்பர் ஸ்டார்: யார் இந்த இன்னொசென்ட்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel