பிரட்டன் ராணி எலிசபத் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாக பக்கிங்ஹாம் அரண்மனை தகவல் தெரிவித்துள்ளது.
பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் உடல்நிலை குறித்து அவரது மருத்துவர்கள் கவலை தெரிவித்ததால் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரலில் மருத்துவக் கண்காணிப்பில் ராணி இருப்பதாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பக்கிங்ஹாம் அரண்மனை செய்தியாளர் இன்று (செப்டம்பர் 8) வெளியிட்ட செய்தியில், “ராணி எலிசபத் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பிலிருந்து வருகிறார்.
தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருப்பதற்கு மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்” என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைத் தவிர்த்துக் கூடுதல் விவரங்கள் அரண்மனை தரப்பிலிருந்து வெளியிடப்படவில்லை.
ராணி எலிசபத்தின் உடல் நலம் குறித்து அறிந்துகொள்ள இளவரசர் சார்லஸ், இளவரசி அன்னே மற்றும் இளவரசர் எட்வர்ட் உட்பட ராணியின் குழந்தைகள் அனைவரும் இப்போது அவரது பக்கத்தில் உள்ளனர், மேலும் சசெக்ஸ், இளவரசர் ஹாரி மற்றும் டச்சஸ் ஆஃப் சசெக்ஸ் மேகன் ஆகியோர் ஸ்காட்லாந்திற்குச் செல்கின்றனர்.
அரச குடும்பத்தின் உறுப்பினர்கள் அனைவரும் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் கோட்டையில் ராணியின் உடல்நிலை தொடர்பாக ஒன்றாகக் கூடுவது மக்களின் கவலைகளை அதிகரிக்கும் என்று அரச நிருபர் ரியானான் மில்ஸ் தெரிவித்துள்ளார்.
ராணியின் உடல்நிலை குறித்து பிரிட்டன் பிரதமர் லிஸ் டிரஸ் கவலை தெரிவித்துள்ளார். மேலும் ராணி உடல்நலம் சீராக வேண்டும் என்று கூறியுள்ளார்.
லிஸ் டிரஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் “இந்த மதிய உணவு நேரத்தில் பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து வரும் செய்தியால் முழு நாடும் ஆழ்ந்த கவலையில் இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரிட்டனில் உள்ள அரசியல் தலைவர்கள் பலரும் ராணியின் உடல்நிலை குறித்து கவலை தெரிவித்துள்ளனர். 95 வயதாகும் இரண்டாவது எலிசபத் ராணி பிரிட்டனில் நீண்ட காலம் பதவி வகிப்பவராகத் திகழ்கிறார்.
மோனிஷா
வால்மார்ட் வளாகத்தை விமானம் மூலம் தகர்க்க முயற்சி: அமெரிக்காவில் பரபரப்பு!