மறைந்த மூத்த அரசியல் தலைவர் காயிதே மில்லத் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜூன் 5) மரியாதை செலுத்தினார்.
1896-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 5-ஆம் தேதி திருநெல்வேலி பேட்டையில் முகமது இஸ்மாயில் பிறந்தார். தனது தன்னலமற்ற தூய்மையான அரசியல் நடவடிக்கைகளால் முகமது இஸ்மாயில் காயிதே மில்லத் என்று அழைக்கப்பட்டார். காயிதே மில்லத் என்பதற்கு உருது மொழியில் வழிகாட்டும் தலைவன் என்று பொருள். இந்திய நாடாளுமன்ற உறுப்பினர், இந்திய அரசியல் மன்றத்தின் உறுப்பினர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவராக காயிதே மில்லத் இருந்துள்ளார்.
இன்று அவரது 128-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா பெரிய பள்ளி வாசலில் உள்ள நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், செஞ்சி மஸ்தான், உதயநிதி ஸ்டாலின், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செல்வம்
தங்கம் விலை குறைந்தது: இன்றைய விலை நிலவரம்!
அதிகாலையில் விபத்து: ஆம்புலன்ஸ் டிரைவருக்கு நேர்ந்த சோகம்!