டெல்லி முதலமைச்சர் அதிஷியின் அதிகாரபூர்வ இல்லத்துக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் சீல் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தனது வீட்டுக்கு சீல் வைத்ததில் துணைநிலை ஆளுநரின் தலையீடு உள்ளதாக முதல்வர் அதிஷி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து டெல்லி முதல்வர் அதிஷியின் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிக்கையில், பிளாக் ஸ்டாப் சாலையில் அமைந்துள்ள அதிகாரபூர்வ முதல்வர் இல்லம், பாஜகவின் உத்தரவின் பேரில் சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும், டெல்லி ஆளுநர் வி.கே.சக்சேனா, அந்த இல்லத்தை பாஜக தலைவருக்கு ஒதுக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளது.
சீல் வைக்கப்பட்டதும் முதல்வர் அதிஷியின் உடமைகள் அந்த வீட்டில் இருந்து அகற்றப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து ஆளுநர் அலுவலகம் தரப்பில் எதுவும் தெரிவிக்கப்பட்டவில்லை.
ஆனால், முதல்வரின் வீடு சீல் வைக்கப்பட்டது குறித்து பேசியுள்ள டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா, “முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் ‘ஷீஷ் மஹால்’தான் சீல் வைக்கப்பட்டுள்ளது. அரசு அதிகாரிகளிடம் இருந்து ஒப்புதல் பெறாத நிலையில் ‘ஷீஷ் மஹாலில்’ தற்போதைய முதல்வர் அதிஷி எப்படி தங்கினார்? முன்னாள் முதல்வர் கேஜ்ரிவாலும் அந்த வீட்டில் தங்க வேண்டும் என்று விரும்புகிறார். அந்த வீட்டில் அப்படி என்ன மறைந்துள்ளது?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 நியூஸ் : ரத்தன் டாடா மறைவு முதல் வேட்டையன் ரிலீஸ் வரை!
விடைபெற்றார் தொழிலதிபர் ரத்தன் டாடா
சிதம்பரம் கோவில் கிரிக்கெட் பிரச்சனை… தீட்சிதர் விளக்கம்!
’‘அனிமல் ‘ படத்தால் நிறைய அழுதேன் ‘ : நடிகை திருப்தி டிமிரி
சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவு : ஸ்டாலினை சந்திக்கும் திமுக கூட்டணி கட்சிகள்!
’ஒரு நிமிடத்தால் விருது பறிபோனது ‘ – ஏ.ஆர்.ரகுமான்