ADMK alliance is for the people- Krishnasamy

”தனி சின்னத்தில் தான் போட்டியிடுகிறோம்” : கிருஷ்ணசாமி

அரசியல்

அதிமுக தலைமையிலான கூட்டணி மக்களுக்கான கூட்டணி என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி சென்னையில், இன்று (மார்ச் 20) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று முதல் தமிழகத்தில் வேட்பாளர் மனு தாக்கல் தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், கூட்டணி சார்பில் 16 பேர் கொண்ட முதற்கட்ட தேர்தல் வேட்பாளர் பட்டியலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று வெளியிட்டார். இந்த பட்டியலில் தேமுதிகவிற்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேபோல், புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி (தனி) தொகுதியும், எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கும் ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, “2024 நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி இடம்பெற்றிருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

இது புதிதாக உருவான கூட்டணி இல்லை. 2019ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் அமையப்பெற்ற கூட்டணியில் தான் புதிய தமிழகம் கட்சி இடம்பெற்று இருந்தது.

அதன் தொடர்ச்சியாகத் தான், இந்த தேர்தலிலும் புதிய தமிழகம் கட்சி, அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது.

இதற்குக் காரணம், மத்தியில் உள்ள ஆட்சிக்கும், தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆட்சிக்கும் எதிரான மனநிலையில் மக்கள் உள்ளனர்.

எந்தவொரு கூட்டணியும் வெற்றிபெற வேண்டும் என்றால், அந்த கூட்டணி மக்களின் மனநிலையை சரியாக கணக்கிட்டால் மட்டுமே அது முடியும்.

அந்த வகையில், கோடான கோடி தமிழ் மக்களின் விருப்பங்களை நிறைவேற்றக்கூடிய வகையில், ஒரு சுதந்திரமான, சுயமரியாதையான கூட்டணி அதிமுக கூட்டணி.

இதன் காரணமாகத்தான், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக கூட்டணியில், புதிய தமிழகம் கட்சி இடம்பெற்றுள்ளது.

தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் உள்ள தமிழ் மக்களின் சுயமரியாதையை மீட்டெடுப்பது, அந்த மக்களுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பது, தமிழகத்தின் உரிமைகளை எந்தவித சமரசமும் இன்றி போராடிப் பெறுவது தான் இந்த கூட்டணியின் முக்கிய நோக்கம்.

கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளில் ஏறக்குறைய 38 இடங்களை எதிர்க்கட்சியினர் பெற்றனர்.

ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் அவர்களது செயல்பாடுகள் எதுவும் சொல்லக்கூடிய அளவில் இல்லை. எனவே, மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள்.

அதிமுக கூட்டணி மக்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யக்கூடிய கூட்டணி. இந்த கூட்டணி மக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள கூட்டணி ஆகும். “ADMK alliance is for the people” – Krishnasamy

சின்னம் குறித்து அதிமுக எங்களை நிர்பந்திக்கவில்லை. எனவே புதிய தமிழகம் கட்சி, தேர்தல் ஆணையம் எந்த சின்னம் ஒதுக்குகிறதோ அந்த சின்னத்தில் அதாவது தனி சின்னத்தில் தான் போட்டியிடும்.

தென்காசி தொகுதியில் யார் போட்டியிடுவார்கள் என்பது குறித்து மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உயர்மட்ட குழுவிடம் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

தேமுதிகவுக்கு 5 தொகுதிகள்: வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட எடப்பாடி

திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிட்டார் ஸ்டாலின்

தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியின் பலம் என்ன? வாக்கு சதவிகிதம் சொல்லும் டேட்டா ரிப்போர்ட்!

“ADMK alliance is for the people” – Krishnasamy

+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0