கொல்லிமலையை ஆண்ட கடையெழு வள்ளல்களில் ஒருவரான வள்ளல் வல்வில் ஓரிக்கு மணிமண்டபம் அமைத்து தர வேண்டி புதிய திராவிட கழக தலைவர் ராஜ்கவுண்டர், செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனை இன்று (மே 16) சென்னை தலைமை செயலகத்தில் சந்தித்து மனு அளித்தார்.
அந்த மனுவில், ” கலைஞரால் 1975-ஆம் ஆண்டு வள்ளல் வல்வில் ஓரிக்கு சிலை அமைக்கப்பட்டு அரசு விழாவானது ஒவ்வொரு ஆண்டும் ஆடி – 17,18 ஆகிய இரு தினங்கள் இன்று வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
முதல்வர் ஸ்டாலின் கடந்த மார்ச் 26-ஆம் தேதி ஈரோடு மாவட்டத்தில் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது கொல்லிமலையை ஆண்ட கடையெழு வள்ளல்களில் ஒருவரான வள்ளல் வல்வில் ஒரிக்கு மணிமண்டபம் அமைத்து தருவதாக தேர்தல் வாக்குறுதி அறிவித்திருந்தார்.
அந்த அறிவிப்பு புதிய திராவிட கழகத்திற்கும் எங்கள் வேட்டுவக்கவுண்டர் சமுதாய மக்களுக்கும் இளைஞர்களுக்கும் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியது.
அதனால் புதிய திராவிட கழகமும் எங்கள் சமுதாய இளைஞர்களும் சட்டமன்ற தேர்தல் களப்பணியில் மிகவும் உற்சாகத்தோடு திமுகவிற்கு ஆதரவாக செயல்பட்டோம். தொடர்ந்து எங்களது ஆதரவை தெரிவித்து வருகிறோம்.
ஆதலால் வள்ளல் வல்வில் ஓரி மாமன்னருக்கு ரூ.3 கோடி மதிப்பீட்டில் மணிமண்டபம் அமைக்க தாங்கள் முதல்வர் ஸ்டாலினிடம் எடுத்துக்கூறியும் அதற்கான ஆணைகளை பெற்றுத்தர வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
கொங்கு மண்டலத்தில் திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் கொங்கு வேளாளர்களுக்கே முன்னுரிமை தருவதாக அங்கிருக்கும் பிற சமுதாயத்தினர் மத்தியில் ஒரு கருத்து தொடர்ந்து இருந்து வருகிறது.
இந்த பின்னணியில் வேட்டுவக்கவுண்டர் சமுதாயத்தில் இருந்து இப்படி ஒரு கோரிக்கை எழுந்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.
வல்வில் ஓரிக்கு விழா வரும் ஆடிமாதம் நடைபெற உள்ள நிலையில் அதற்குள் மணிமண்டப விவகாரத்தில் திமுக அரசு என்ன முடிவெடுக்க போகிறது என்பது கொங்கு வட்டாரத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
செல்வம்
தோனியிடம் ஆட்டோகிராஃப் : சுனில் கவாஸ்கர் நெகிழ்ச்சி!
கர்நாடகா அடுத்த முதல்வர் யார்?: ராகுல் – கார்கே ஆலோசனை!
Congratulation👍👍👍