puratchi bharatham aiadmk

அதிமுக தலைமையில் தனி கூட்டணி அமைப்போம்: ஜெகன்மூர்த்தி

அரசியல்

அதிமுக தலைமையில் தனி கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என்று புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன்மூர்த்தி தெரிவித்துள்ளார்.

என்டிஏ கூட்டணியிலிருந்து விலகுவதாக அதிமுக நேற்று அறிவித்தது. அதிமுகவின் நிலைப்பாட்டை கூட்டணி கட்சியாக புரட்சி பாரதம் வரவேற்றுள்ளது

புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன்மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து அதிமுக வெளியேறியதை புரட்சி பாரதம் கட்சி வரவேற்கிறது. சமீப காலமாக திராவிட தலைவர்களையும் அதிமுக மாநாட்டையும் விமர்சித்து வந்த பாஜகவை கண்டித்து தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து அதிமுக வெளியேறியுள்ளது.

அதிமுக தலைமையிலான கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சி இயங்கி வரும் நிலையில் அவர்கள் எடுக்கும் முடிவுக்கு நாங்கள் உறுதுணையாக நிற்போம். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமையும் கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சி அங்கம் வகிக்கும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் அமையும் கூட்டணியில் பங்கேற்று புரட்சி பாரதம் கட்சி தேர்தலை எதிர்கொள்ளும். என்டிஏ இந்தியா கூட்டணியில் பங்கேற்காமல் அதிமுக தலைமையில் தனி கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவோம்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

விஜயலட்சுமி ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு!

அதிமுக – பாஜக கூட்டணி முறிவு நிரந்தரமானதல்ல: கிருஷ்ணசாமி

+1
1
+1
3
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *