பூலித்தேவனின் வீரமும் உறுதிப்பாடும் எண்ணற்றோருக்கு ஊக்கமளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி புகழ்ந்து இருக்கிறார்.
தமிழகத்தின் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த விடுதலை போராட்ட வீரர் புலித்தேவனின் பிறந்தநாள் ஒவ்வொரு ஆண்டும் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே நெற்கட்டும் செவலில் அவரது நினைவிடம் உள்ளது.
இங்கு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை பூலித்தேவன் முழு உருவ வெண்கல சிலைக்கு தமிழக அரசு சார்பிலும், பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்கள் சார்பிலும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரங்களில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.
பூலித்தேவன் 307வது பிறந்த நாளான இன்று பல்வேறு தலைவர்கள் நினைவுகூர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில், “மாவீரன் பூலித்தேவருக்கு அவரது பிறந்த நாளில் வணக்கங்களை செலுத்துகிறேன். அவரது வீரமும் உறுதிப்பாடும் எண்ணற்றோருக்கு ஊக்கமளித்து வருகிறது.
முன்னணியில் நின்று அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போரிட்டவர். மக்களுக்காக எப்போதும் தளராது பாடுபட்டவர்” என தமிழில் பதிவிட்டுள்ளார்.
கலை.ரா
சொந்த விமானம் தாங்கிக் கப்பல்: நாட்டுக்கு அர்ப்பணிக்கும் மோடி