கர்நாடகா தேர்தலில் போட்டி?: எடியூரப்பாவை சந்தித்த ஓபிஎஸ் அணி

அரசியல்

கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி இன்று (ஏப்ரல் 7) சந்தித்து பேசியுள்ளார்.

கர்நாடகாவில் மொத்தம் உள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் வரும் மே 10ம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 13ம் தேதி தொடங்க உள்ளது.

இந்நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி, பெங்களூருவில் பாஜகவின் மூத்த தலைவரும், கர்நாடகா முன்னாள் முதல்வருமான எடியூரப்பாவை இன்று சந்தித்து பேசியுள்ளார்.

அப்போது கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியுடன் அதிமுக போட்டியிடுவது குறித்து ஓபிஎஸ் சார்பில் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த சந்திப்பின் போது ஓ.பி.எஸ். கொடுத்த ஒரு கடிதத்தையும் புகழேந்தி, எடியூரப்பாவிடம் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு புகழேந்தி அளித்த பேட்டியில், “எடியூரப்பாவிடம் தற்போதைய அரசியல் சூழலை எடுத்து கூறினோம். கர்நாடகா மாநிலத்தில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் இடங்களில் தொகுதி ஒதுக்கீடு செய்ய கோரிக்கை வைத்தோம். இனி அவர்கள் முடிவு செய்து அறிவிப்பார்கள்.” என்று தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் எடப்பாடி தலைமையிலான அதிமுக – பாஜக இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.

எனினும் இருகட்சிகளும் ஒரே கூட்டணியில் உள்ளதால் கர்நாடகாவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் 3 தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் பாஜக தலைவர்களிடம் கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஓ பன்னீர் செல்வம் ஆதரவாளரான புகழேந்தி எடியூரப்பாவை இன்று திடீரென சந்தித்து பேசியுள்ளது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

24 மணி நேர தீவிர போலீஸ் பாதுகாப்பில் பொம்மன்-பெள்ளி தம்பதி!

பிரதமருக்கு எதிராக கருப்பு கொடி ஏந்தி போராட்டம்!

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *