எம்.எல்.ஏ-வை மிரட்டிய 17 வழக்குகளில் தேடப்படும் ரவுடி கைது!

அரசியல்

புதுச்சேரியில் ரவுடிகளுக்கு எதிராக போலீசார் அதிரடி ஆக்‌ஷனில் இறங்கி வருகின்றனர். கடந்த வாரம் ‘ஆபரேஷன் திரிசூல்’ என்ற பெயரில் அதிரடியாக ரெய்டு நடத்தி 61 ரவுடிகளை கைது செய்தனர்.

இந்தநிலையில், புதுச்சேரி உழவர்கரை சட்டமன்ற உறுப்பினர் சிவசங்கருக்கு கொலை மிரட்டல் விடுத்த ரவுடி ராமுவை போலீசார் இன்று (நவம்பர் 13) கைது செய்தனர்.

புதுச்சேரி உழவர்கரை சட்டமன்றத் தொகுதி சுயேட்சை எம்.எல்.ஏ-வாகவும், வணிகர் சங்க கூட்டமைப்பின் தலைவராகவும் இருப்பவர் சிவசங்கர்.

இவர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு எதிரில் நகராட்சிக்கு சொந்தமான தனியார் கடைகளை ரவுடி ராமு ஆக்கிரமித்திருப்பதாக நகராட்சி ஆணையரிடம் புகார் தெரிவித்திருந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த ராமு, சிவசங்கர் எம்.எல்.ஏ வீட்டுக்கே நேரடியாகச் சென்று கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார். இதுதொடர்பாக புதுச்சேரி புதிய சட்டம் ஒழுங்கு எஸ்.எஸ்.பி-யாக பொறுப்பேற்றுள்ள கலைவாணன் ஐபிஎஸ்ஸிடம் சிவசங்கர் புகார் அளித்தார்.

இதனையடுத்து கலைவாணன் அந்த பகுதியைச் சேர்ந்த எஸ்.பி மற்றும் போலீசாரிடம் ரவுடி ராமுவின் பின்னணி குறித்து விசாரித்தார்.

விசாரணையில், ரவுடி ராமு 2008 –  2021 வரை மிகவும் ஆக்டிவாக இருந்திருக்கிறார். இவர் மீது மூன்று கொலை வழக்கு, 8 வழிப்பறி வழக்கு, தமிழ்நாட்டில் நான்கு வழக்கு உள்பட 27 வழக்குகள் உள்ளது. இதில் ஐந்து வழக்கில் குற்றவாளியை பிடிக்க முடியாமலேயே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 9 வழக்குகளில் நீதிமன்ற வாரண்ட் இருக்கிறது. மொத்தம் 17 வழக்குகளில் பல வருடமாக தேடப்படும் குற்றவாளியாக இருந்து வந்துள்ளார் என்பது தெரியவந்தது.

இதனையடுத்து, எம்.எல்.ஏ சிவசங்கருக்கு கொலை மிரட்டல் விடுத்த ராமுவை எஸ்.எஸ்.பி கலைவாணன் தலைமையில் தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில், நேற்று முன் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் சரணடைய முயற்சித்த ரவுடி ராமுவின் மூவ்மென்ட்டை தொடர்ந்து கண்காணித்து வந்த  ஸ்பெஷல் டீம் அவரை  நீதிமன்றத்தில் சரணடைவதற்கு முன்பே கைது செய்தனர்.

புதுச்சேரியில் ரவுடிகளுக்கு எதிரான போலீசாரின் ஆக்‌ஷன் தொடர்வதால், பல ரவுடிகள் கலக்கத்தில் உள்ளனர்.

வணங்காமுடி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? வானிலை மையம் வார்னிங்!

மருத்துவர் பாலாஜிக்கு கத்திக்குத்து… “குற்றவாளி மீது கொலை முயற்சி வழக்கு” – கமிஷனர் அருண்

+1
0
+1
0
+1
0
+1
4
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *