தமிழ்நாடு போலவே புதுச்சேரியிலும் நாடாளுமன்றத் தேர்தல் பரபரப்புகள் தொடங்கிவிட்டன.
கடந்த 2019 பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ், திமுக, விசிக, கம்யூனிஸ்ட் கூட்டணி வேட்பாளராக காங்கிரஸ் கட்சியின் வைத்திலிங்கம் 4,44,981 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
என். ஆர். காங்கிரஸ், பாஜக, அதிமுக, பாமக, தேமுதிக கூட்டணியின் என். ஆர். காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் நாராயணசாமி 2,47,956 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.
இந்த நிலையில் 2024 மக்களவைத் தேர்தலில் புதுச்சேரி எம்பி தொகுதியில் நாங்கள்தான் போட்டியிடுவோம் என்று பாஜக தரப்பிலும், என்.ஆர். காங்கிரஸ் தரப்பிலும் பேசி வருகிறார்கள். இரு தரப்பிலும் பலரும் எம்பி தேர்தலில் நிற்க கடுமையாக முயற்சித்து வருகின்றனர்.
இது தொடர்பாக பிப்ரவரி 3 ஆம் தேதி முதல்வர் ரங்கசாமியும் பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானாவும் பேச்சு நடத்தியுள்ளனர்.
அப்போது முதல்வர் ரங்கசாமி, ‘பாஜகவுக்கு எம். பி. சீட்டை நான் விட்டுக் கொடுக்க தயாராக இருக்கிறேன். ஆனால் ஒரு நிபந்தனை… வேட்பாளர் உங்கள் கட்சியிலேயே என்னுடைய தேர்வாக இருக்கட்டும்’ என்று நிபந்தனை விதித்து பாஜக நியமன எம். எல். ஏ.வான ராமலிங்கம் பெயரை முன் மொழிந்துள்ளார். இதற்கு பாஜக தரப்பிலும் ஆராய்ந்து நல்ல முடிவு சொல்வதாக தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே ராமலிங்கத்தை வேட்பாளராக முடிவு செய்த ரங்கசாமி, அவருக்காக புஸ்ஸி ஆனந்த் மூலமாக தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்யை கட்சி தொடங்கும் முன்பே சந்தித்துள்ளார்., மேலும் புதுச்சேரி அதிமுக புள்ளிகளோடும் தனக்கு ஆதரவு கேட்டு ரகசியமாக பேசி வருகிறார் முதல்வர் ரங்கசாமி.
–வணங்காமுடி
மீண்டும் தள்ளிப்போகும் தங்கலான்?
ஆளுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கி… தன்னார்வலர்களை கௌரவப்படுத்திய கார்த்தி