இதெல்லாம் சரியல்ல: தமிழிசை சவுந்தரராஜன்

Published On:

| By Kavi

ஆளுநர் பதவிக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுத்துத்தான் ஆக வேண்டும் என்று தெலங்கானா – புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் இன்று (டிசம்பர் 8) மரியாதை செலுத்தினார்.

இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ”வரும் டிசம்பர் 9ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் ஜி20 ஆலோசனைக் கூட்டத்தில் ஆளுநர்கள், துணைநிலை ஆளுநர்கள், முதல்வர்கள் கலந்துகொள்கிறார்கள்.

தெலங்கானா மற்றும் புதுச்சேரியில் ஜி20 மாநாட்டின் பெருமை பற்றிய கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் நடத்தப்படும்” என்று தெரிவித்தார்.

அப்போது தமிழக ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்படுகிறதே என்ற கேள்விக்கு,

“ஆளுநர் என்பவர் முதல் குடிமகன். அவர்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுத்துதான் ஆக வேண்டும். என்ன பிரச்சினை இருந்தாலும் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். முழுமையாக ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்று வழக்கு தொடர்வது சரியல்ல என்பதுதான் என்னுடைய கருத்து” என்று தெரிவித்தார்.

பிரியா

மிக அதிக மழை : தமிழ்நாட்டிற்கு ரெட் அலர்ட்!

குளிர்கால கூட்டத்தொடர்: திமுகவின் கோரிக்கைகள் என்னென்ன?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share