திமுக எம்.பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான புதுச்சேரி ஸ்ரீ லெட்சுமி நாராயணா மருத்துவ கல்லூரியில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவதால் செவிலியர்கள், பயிற்சி மருத்துவர்கள் கல்லூரிக்குள் நுழைய இன்று (அக்டோபர் 5) அனுமதிக்கப்படவில்லை.
முன்னாள் மத்திய அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகத்ரட்சகன் கல்வி நிறுவனங்கள், , ஹோட்டல்கள், மதுபான தொழிற்சாலைகள், ரியல் எஸ்டேட் தொழில்களில் ஈடுபட்டு வருகிறார்.
ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய 60-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். ஆயுதப்படை காவல்துறை உதவியுடன் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
சென்னை அடையாறில் உள்ள ஜெகத்ரட்சகன் எம்.பி வீடு, பள்ளிக்கரணை ஜெருசலேம் பொறியியல் கல்லூரி, சேலையூர் பாரத் மருத்துவ கல்லூரி, தி நகர் அலுவலகம், அக்கார்ட் ஹோட்டல் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில் புதுச்சேரி அகரம் பகுதியில் உள்ள ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான ஸ்ரீ லெட்சுமி நாராயணா மருத்துவக்கல்லூரியில் 15 வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த சோதனையின் போது ஊழியர்கள், செவிலியர்கள், பயிற்சி மருத்துவர்கள், மாணவர்களுக்கு கல்லூரிக்குள் செல்ல அனுமதியளிக்கப்படவில்லை. பின்னர் மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிக்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. அவசர சிகிச்சைக்கான நோயாளிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
கலைஞர் நூற்றாண்டு: ஒரு கோடி பனை விதைகள் விதைக்கும் திட்டம்!
Jayam Ravi 33 : மீண்டும் “ஷோபனா”வாக நித்யா மேனன்?
Asian Games 2023: ஒரேநாளில் அதிரடி.. இந்தியாவின் நிலை என்ன?