புதுச்சேரி பாஜக தலைவர் மாற்றம்!

Published On:

| By christopher

puducherry bjp president changed

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், புதுச்சேரி ஆளும் கூட்டணியில் உள்ள பாஜகவினர் தேர்தலில் வெற்றி பெறுவது தொடர்பாக கடந்த சில மாதங்களாக ஆலோசனை கூட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், புதுசேரி பாஜக தலைவராக இருந்த சாமிநாதன் மாற்றப்பட்டு செல்வகணபதி இன்று (செப்டம்பர் 25) நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பான அறிக்கையை பாஜக தேசிய பொதுச்செயலாளர் அருண்சிங் வெளியிட்டுள்ளார். அதில், ”புதுச்சேரியின் புதிய பாஜக தலைவராக செல்வகணபதி எம்.பி.யை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நியமித்துள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த அறிவிப்பு உடனடியாக செயல்பாட்டுக்கு வரும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியைத் தொடர்ந்து நாகலாந்திலும் பாஜக மாநில தலைவர்  மாற்றப்பட்டுள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணா குறித்து அவதூறாக பேசியதாக தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை மாற்ற வேண்டும் என்று அதிமுகவினர் கூறி வருகின்றனர். இந்த நிலையில் புதுச்சேரி பாஜக தலைவர் மாற்றப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

விஜய் சேதுபதியிடம் கால்சீட் கேட்கும் ஜெயம் ரவி

பாஜகவா? திமுகவா?: கோஷம் போட்டு மெஜாரிட்டி நிரூபித்த தொண்டர்கள்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel