கடந்த வாரம் நடந்த திமுக பொதுக்குழுவில் பேசிய முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ”நம் கட்சிகாரர்கள் யாரும் எந்த ஒரு புதிய பிரச்சினைகளையும் உருவாக்கி இருக்க கூடாது என்று நினைத்துதான், நான் நாள் தோறும் காலையில் கண் விழிக்கிறேன்.
இது சில நேரங்களில் என்னை தூங்கவிடாமல் கூட ஆக்கி விடுகிறது, என் உடலை பார்த்தாலே அது உங்களுக்கு தெரியும் என்று கூறியிருந்தார்.
அமைச்சர்களால் தான் முதல் அமைச்சர் ஸ்டாலினின் தூக்கம் கெடுகிறதா என்பது குறித்தும் அமைச்சர்கள் முதல்வருக்கு கட்டுப்படவில்லையா என்பது பற்றியும் அதில் பொதுமக்கள் கூறிய கருத்துக்கள் சிலவற்றை இப்போது பார்க்கலாம்:
”அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள் பற்றி இங்கே இருப்பவர்கள் மட்டும் இன்றி கடைக்கோடி கன்னியாகுமரியில் இருப்பவர்களுக்கு கூட பிரச்சினை வந்து விடக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் தான் முதல்வர் அவ்வாறு கூறியுள்ளார்.
இந்த விஷயத்தில் தான் மக்கள் மன்றத்தில் மன்னிப்பு கேட்பதாக அமைச்சர் பொன்முடி நேற்று கூட கூறினார் என்று அர்ஜூனன் என்பவர் தன்னுடைய கருத்தை தெரிவித்தார்.
இது குறித்த கேள்விக்கு “கலைஞர், ஜெயலலிதா வைப்போல் ஸ்டிரிக்ட் முதல்வராக இல்லாமல் ஸ்டாலின் அமைச்சர்களை ரொம்ப ஸாஃப்டாக ஹேண்டில் பன்னுவதாக இளைஞர் மணி தன்னுடைய கருத்தை நம்மிடம் தெரியபடுத்தினார்.
ஆட்டோ ஓட்டுநர் அகிலனிடம் கேட்ட போது ‘ஜெயலலிதாவை பார்த்தால் அமைச்சர்கள் கீழே குனிந்து சலாம் போடுவார்கள்.
ஆனால் முதல்வர் ஸ்டாலின் எல்லோரையும் சமமாக பார்க்கிறார் அதனால் தான் அவருக்கு அமைச்சர்கள் ஆப்பு அடிக்கிறாங்க என்று கூறினார்.
போக்குவரத்து துறை எங்களை போன்ற ஆட்ட ஓட்டுநர்களை கண்டுகொள்வதில்லை. திமுக கட்சி கெடுவதற்கு காரணமே அமைச்சர்கள் தான். பெண்கள் இலவச பஸ் கேட்டார்களா என்றும் கேள்வி எழுப்பினார்.
எல்லாம் இருந்தும் தன்னால் தூங்க முடியவில்லை என்று முதல்வர் பொதுக்குழுவில் கூறியிருப்பதன் மூலம் அவர் எவ்வளவு கடினமான சூழலில் இருக்கிறார் என்பதை புரிந்து கொண்டு அமைச்சர்கள் இனிமேலாவது கவனமாக செயல்பட வேண்டும் என்றும் மற்றொரு ஆட்டோ ஓட்டுநர் பஞ்சா என்பவர் கூறினார்.
”முதல்வர் நல்ல காரியங்களை தமிழகத்தில் செயல்படுத்தி வருகிறார். இந்த சூழலில் அமைச்சர்கள் அமைதியாக இருப்பது நல்லது என்று தன்னுடைய கருத்தை மின்னம்பலம்.காமிடம் பதிவு செய்தார் கேரளாவைச் சேர்ந்த முதியவர் கமாலுதீன்.
இந்து மத சர்ச்சையும் பொன்னியின் செல்வன் வசூலும் : சின்ன பழுவேட்டைரையர் ட்வீட்!
70 விழாக்களில் திரையிட்டு 46 விருதுகளை வென்ற மாமனிதன்!
சிறப்பான பதிவு.
காலத்திற்கு ஏற்ற ஒரு பதிவு அதிலும் கருத்து பகிர்ந்தவர்களின் பெயர் (ம) தொழில் பதிவு புதுமை.