பிடிஆர் VS அண்ணாமலை : ட்விட்டர் மோதல்!

அரசியல்

தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இலவசம் தொடர்பான விவாத நிகழ்ச்சியில் பேசிய போது, மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறையை விட தமிழகத்தின் நிதிப் பற்றாக்குறை குறைவாக உள்ளது என்றும்,

இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுடன் தமிழகத்தை ஒப்பிடும்போது, தனிநபர் வருவாய், மனிதவள மேம்பாடு போன்றவற்றில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது என்றும் பேசியிருந்தார்.

நிதியமைச்சரின் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலானது.

இதுதொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “திமுகவின் மூன்றாவது தலைமுறை அரசியல் வாரிசு அமெரிக்கா ரிட்டர்ன் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் அர்த்தமற்ற, தேவையற்ற நடவடிக்கைகளால், மாநிலத்தின் நிதி நிர்வாகத்தையும், கடின உழைப்பாளிகளான மக்களின் பணத்தையும் வீணடிக்கக்கூடாது.

தமிழ்நாடு நிதிநிலை ஏற்கனவே மந்த நிலையில் இருக்கும்போது, பல்வேறு தேர்தல் வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. பேச மட்டுமே செய்யக்கூடியவரும், செயலற்ற தன்மைக்கு பெயர்பெற்றவருமான நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாநிலத்தின் திறனற்ற நிர்வாகங்களுக்கு காரணமானவர்கள்.

எதிர்பாராதவிதமாக, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மாநிலத்தின் பொருளாதாரத்தை நாட்டின் பொருளாதாரத்துடன் ஒப்பிடுகிறார்.

நமது மாநிலத்தின் நிதி நிலைமையுடன் சமமாக இருக்கும் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து நாம் எவ்வளவு பின் தங்கியுள்ளோம் என்பதனை அவர் உணர வேண்டும்.

மாநிலத்தின் நிதிபற்றாக்குறை குறித்து நிதியமைச்சர் தம்பட்டம் அடித்துக்கொள்வதற்கு முன் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்” என்று அவர் காட்டமாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பாஜக தலைவர் அண்ணாமலைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பிடிஆர் தனது ட்விட்டர் பதிவில், “பொருளாதாரம், நிதி நிர்வாகம் குறித்து ஆடுகளுடன் விவாதிப்பது என்பது, விளம்பரங்களைத் தேடும் விளக்கு கம்பத்துடன் தத்துவங்களை விவாதிப்பது போன்றதாகும்.” என்ற அவரது பாணியில் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

நிதியமைசச்ர் பிடிஆர் மற்றும் அண்ணாமலை ட்விட்டர் மோதல் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

செல்வம்

இலவசத்தால் வாழ்ந்தோமா ? வீழ்ந்தோமா ?

+1
0
+1
4
+1
0
+1
1
+1
0
+1
1
+1
1

1 thought on “பிடிஆர் VS அண்ணாமலை : ட்விட்டர் மோதல்!

  1. விளம்பர பிரியர்களுக்கு பதில் சொல்லாமல் இருப்பது நல்லது அந்நேரத்தை மக்களுடன் கலந்துரையாடுவது மேல்.

    மோடி சொன்ன வாக்குர்தி நிறைவேற்றி விட்டார் தமிழக மக்கள் நம்பிட்டாங்க அ மலை

Leave a Reply

Your email address will not be published.