ptr says gst council meeting madurai

“துறை மாற்றத்தால் மதுரையில் ஜிஎஸ்டி கவுன்சில் நடத்தமுடியவில்லை” – பிடிஆர்

அரசியல்

துறை மாற்றத்தால் மதுரையில் ஜிஎஸ்டி கவுன்சிலிங் நிகழ்ச்சி நடத்த முடியவில்லை என்று பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

மதுரை கட்டட பொறியாளர்கள் சங்கம் (ஏ.எம்.சி.இ.,) சார்பில் தமுக்கத்தில் இன்று (ஆகஸ்ட் 18) முதல் மூன்று நாள்களுக்கு இன்ஜினியர்ஸ் பில்ட் எக்ஸ்போ 2023′ கட்டிட கண்காட்சி நடைபெற்றது. இதில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், மதுரை மேயர் இந்திராணி ஆகியோர் கலந்து கொண்டனர். கண்காட்சியை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் திறந்துவைத்தார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், “மதுரையில் எந்த சாலையில் சென்றாலும் அங்குள்ள கட்டட வளர்ச்சி எந்த ஆண்டில் அந்த கட்டிடம் கட்டப்பட்டது என்பது நமக்கு தெரியும். கட்டுமான தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது.

சென்ற ஆண்டு என் விருப்பத்திற்கு ஏற்ப மத்திய நிதியமைச்சர் ஜிஎஸ்டி கவுன்சிலை மதுரைக்கு கொண்டு வருவேன் என உறுதி அளித்திருந்தார். அந்த நிகழ்ச்சியை தமுக்கம் அரங்கில் நடத்த நினைத்திருந்தேன். ஆனால் துறை மாறியதால் ஜிஎஸ்டி கவுன்சில் உறுப்பினராக இல்லை. அதனால் ஜிஎஸ்டி கவுன்சிலிங் நிகழ்ச்சி இங்கு நடத்த முடியவில்லை என்றாலும் கட்டட தொழில்நுட்ப கண்காட்சி நடத்துவது எனக்கு ஒரு ஆறுதலாக இருக்கிறது” என்று தெரிவித்தார்.

மீனவர்களுக்கு 10 புதிய அறிவிப்புகள்!

“மோடி ஆட்சியில் மீனவர்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது” – ஸ்டாலின்

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *