மதுரையில் இன்று (செப்டம்பர் 25) பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு கணக்கும் தெரியாமல், துறையும் தெரியாமல், கொள்கையும் தெரியாமல் எப்படி இவ்வளவு நாள் அமைச்சராக இருந்தார்.
மின்சார கட்டணத்தையும், சொத்து வரியையும் உயர்த்தியதால் திமுக அரசு நிதி பற்றாக்குறையை குறைத்துள்ளார்கள் என்று கூறியுள்ளார். நாங்கள் கடந்த வருட நிதிப்பற்றாக்குறையை குறைத்துள்ளோம்.
இந்த வருடம் சொத்து வரி, மின்சார கட்டணத்தை உயர்த்தியதால், போன வருட நிதிப்பற்றாக்குறையை எப்படி குறைக்க முடியும். இவர் எப்படி பத்து வருடங்கள் அமைச்சராக இருந்தார்.
இருசக்கர வாகன திட்டம், தாலிக்கு தங்கம், மடிக்கணினி திட்டத்தை திமுக நிறுத்திவிட்டார்கள் என்று கூறியிருக்கிறார்.
இப்படி அப்பட்டமாக பொய் சொல்வதற்கு, உதயகுமாருக்கு கொஞ்சமாவது வெட்கம், மானம் இருக்க வேண்டும்.
அதிமுக ஆட்சிக் காலத்தில் கடைசி இரண்டு ஆண்டுகளில் மாணவர்களுக்கு மடிக்கணினி கொடுக்கவில்லை. அவர்களுடைய திட்டத்தை அவர்களே நிறுத்தி விட்டார்கள்.
தாலிக்கு தங்கம் திட்டத்தை ஏன் நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது என்றால், 4 வருடங்களுக்கு தங்கமும் வாங்காமல், தாலியும் கொடுக்காமல் நிதியும் கொடுக்காமல், நிதிப்பற்றாக்குறையால் தாலிக்கு தங்கம் திட்டத்தை நிறுத்தி விட்டார்கள்.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, தாலிக்கு தங்கம் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட ரூ.698 கோடியை உயர்கல்வி மாணவர்கள் கல்விக்கு ஒதுக்கியுள்ளோம். தாலிக்கு தங்கம் திட்டத்தை, அதிமுக அரசு கடந்த 4 ஆண்டுகளாக செயல்படுத்தவில்லை.
புதுசு புதுசாக உதயகுமார் பொய் சொல்கிறார். எத்தனை வருடம் அதிமுக இருசக்கர வாகன திட்டத்தை செயல்படுத்தினார்கள்.
நிதியில்லாமல் அதிமுக அரசு நடத்த முடியாமல் போன திட்டங்களை, திமுக அரசு நிறுத்தியது என்று சொல்வது அரசியலில் மிகவும் தவறு.
உங்களுக்கு செயல்திறன் இல்லை. நிதி மேலாண்மை திறன் இல்லை. உங்கள் ஆட்சியில் நிறுத்தப்பட்ட திட்டங்களை நாங்கள் நிறுத்தினோம் என்று பொய் சொல்கிறீர்கள்” என பழனிவேல் தியாகராஜன் காட்டமாக பேசினார்.
செல்வம்
மாலைக்குள் பெட்ரோல் குண்டு வீசியவர்கள் கைது: டிஜிபி
உட்கட்சி தேர்தல்: அறிவாலயத்தில் திமுகவினர் போராட்டம்!