டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் குளறுபடி நடந்துள்ளதா என்று அதிகாரிகளிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளேன் என்று நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
குரூப் 4 தேர்வில் தென்காசி மற்றும் சிவகங்கையில் ஒரே பயிற்சி மையத்தில் படித்த அடுத்தடுத்த பதிவெண் கொண்ட மாணவர்கள் அதிகளவில் தேர்ச்சி அடைந்துள்ளனர். குரூப் 4 தேர்வில் குளறுபடி நடந்துள்ளது என்று எடப்பாடி பழனிசாமி இன்று சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
இதுகுறித்து சட்டமன்றத்தில் பேசிய நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், “குரூப் 4 தேர்வு குளறுபடி குறித்து எனது கவனத்திற்கு வந்தவுடன் ஒரே தேர்வு மையத்தில் பயிற்சி பெற்று அதிக மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளது இதற்கு முன்னாள் நடந்துள்ளாதா என்று டிஎன்பிஎஸ்சி துறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டுள்ளேன்.
டிஎன்பிஎஸ்சி தேர்வு நடைமுறையை மாற்ற வேண்டும் என்று நானே பல முறை தெரிவித்துள்ளேன். மாநிலத்தின் வளர்ச்சிக்காக அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
அரசு அலுவலகங்கள் மூடப்படும்: அரசு ஊழியர் சங்கத்தின் போராட்ட எச்சரிக்கை!