வைஃபை ஆன் செய்ததும் தமிழ்நாடு நிதி அமைச்சர் பி. டி. ஆர். குரல் என்று சொல்லி உலா வரும் ஆடியோ இன்பாக்ஸில் வந்து விழுந்தது.
அதைப் பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.
“ஏப்ரல் 19ஆம் தேதி இரவு சமூக தளங்களில் தமிழ்நாடு நிதி அமைச்சர் பி. டி. ஆர். பழனிவேல் தியாகராஜன் ஆங்கிலத்தில் பேசுவது போல 28 நொடிகள் கொண்ட ஓர் ஆடியோ கிளிப் வெளியாகி அரசியல் வட்டாரத்தை அதிர வைத்தது.
உதயநிதி, சபரீசன் ஆகியோர் கடந்த ஒரு வருடத்தில் கோடிக்கணக்கான ரூபாய்களை சேர்த்து விட்டனர் என பி. டி. ஆர். யாருடனோ உரையாடுவது போல அந்த குரல் பதிவு இருந்தது. நேற்று இரவே அதை பாஜகவின் அமர் பிரசாத் ரெட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்தார்.
இன்று ஏப்ரல் 20 ஆம் தேதி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இந்த ஆடியோவை வெளியிட்டு பி. டி. ஆர். குரல் என்று சொல்லப்படும் ஆங்கில குரலின் தமிழ் சப்டைட்டிலையும் கொடுத்திருந்தார். டிஎம்கே ஃபைல்ஸ் வெளியிட்டதை வலிமைப்படுத்துவதாக இருக்கிறது என்றும் அண்ணாமலை குறிப்பிட்டிருந்தார்.
இந்த ஆடியோ நேற்று இரவு முதல் திமுக நிர்வாகிகள் மத்தியிலும் அமைச்சர்கள் மத்தியிலும் பேசு பொருளாக இருக்கிறது.
ஏற்கனவே பி. டி. ஆரை பிடிக்காத சில தென் மாவட்ட அமைச்சர்கள் இந்த ஆடியோவை பற்றி உடனடியாக திமுக மேலிடத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று… ‘ எப்படி எல்லாம் பேசி இருக்கிறார் என்று கேளுங்கள்’ என்று பிடிஆர் மீது தங்களுக்கு இருக்கும் அரசியல் கோபத்தைத் தீர்த்துக் கொண்டனர்.
சிலர் சபரீசனிடமும் பிடிஆர் பற்றிய தங்களின் வேறு சில கோபங்களையும் கொட்டியிருக்கிறார்கள்.
இதுகுறித்து ஊடகங்களில் இருந்து திமுக நிர்வாகிகளை தொடர்பு கொண்ட போது, ’நாங்கள் எந்த கருத்தையும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்க மாட்டோம், தெரிவிக்க வேண்டாம் என்று தலைமை உத்தரவு என கூறிவிட்டனர்.
அதே நேரம், ‘இப்போது சாஃப்ட்வேர் மூலமாக யார் குரலையும் மறு உருவாக்கம் செய்து அதில் நம் இஷ்டம் போல வார்த்தைகளை பயன்படுத்தலாம். அப்படி ஒரு ஃபேக் ஆடியோவாக இருக்கலாம். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளார்கள்.
இந்த நிலையில் நாங்கள் வெளிப்படையாக எதுவும் சொல்வதற்கில்லை. பி டி ஆர் தான் இது பற்றி விளக்கம் அளிக்க வேண்டும். தலைவரிடம் கலந்து ஆலோசித்து விட்டு பிடிஆர் இது பற்றி உரிய விளக்கம் அளிப்பார்’ என்பதையும் ஆப் த ரெக்கார்டாகவே கூறினார்கள்.
சமூக தளங்களில் ஆக்டிவாக இயங்கக்கூடிய அமைச்சர் பி டி ஆர் கவனத்திற்கும் இந்த ஆடியோ சென்று இருக்கிறது. இன்று காலை தனது ட்விட்டர் பக்கத்தில் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையின் ஒரு லிங்க்கை பகிர்ந்து இருந்தார் பி டி ஆர்.
அதேபோல இன்று ஏப்ரல் 20 ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் டென்மார்க் நாட்டின் பாராளுமன்ற குழுவினர் நிதி அமைச்சர் பி டி ஆரை சந்தித்திருக்கிறார்கள். இதுகுறித்து அரசு செய்தி குறிப்பும் புகைப்படத்தோடு வெளிவந்துள்ளது.
இந்தப் புகைப்படத்தையும் செய்தி குறிப்பையும் தனது பேஸ்புக் பக்கத்தில் இன்று மாலை பகிர்ந்திருக்கிறார் பி டி ஆர். எனவே இந்த சர்ச்சைக்குரிய ஆடியோ உலா வந்து கொண்டிருக்கும் நிலையிலேயே தனது சமூக பக்கங்களில் வேறு சில பதிவுகளையும் பகிர்ந்திருக்கிறார் பிடிஆர்.
இன்று சட்டமன்றத்தில் காவல்துறை மானிய கோரிக்கை என்பதால் முதலமைச்சர் ஸ்டாலின் வழக்கத்தை விட கூடுதல் பிசியாக இருந்தார். அதனால் இன்று மாலைக்கு பிறகு முதல்வரை சந்தித்து பிடிஆர் பேசியபிறகுதான் அடுத்து என்ன என்பது தெரியும்’ என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.
இந்த ஆடியோவின் உண்மைத் தன்மை இன்னும் நிரூபிக்கப்படாத நிலையில் சைபர் க்ரைம் போலீஸார் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்” என்ற மெசேஜ்க்கு சென்ட் கொடுத்து ஆப்லைன் போனது வாட்ஸ் அப்.
“போதை பொருட்களை ஒழிக்க கடுமையான நடவடிக்கைகள்”: ஸ்டாலின்
அசத்திய சிராஜ்: பஞ்சாப் அணியை வீழ்த்தியது பெங்களூரு!
இந்தாளு கவர்னருக்கே ஆப்பு அடிக்கிறாரேனு, அவரை பிரிச்சு விட, எதாச்சும் சித்து வேலை பண்ணியிருப்பாய்ங்கனு தோணுது; ஏன்னா அவரு அப்படிப் பட்டவரு இல்ல…