பழனிவேல் தியாகராஜனுக்கு புதிய பொறுப்பு!

அரசியல்

திமுகவின் சொத்து பாதுகாப்புக் குழுச் செயலாளராக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.

திமுக சட்டதிட்ட விதி 18, 19 பிரிவுகளின்படி தலைமை கழக நிர்வாகிகள், குழு தலைவர்கள், இணை செயலாளர்கள், துணை செயலாளர்களை நியமித்து பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதில் சொத்துப் பாதுகாப்புக் குழு தலைவராக அறந்தாங்கி இராசன்,
சொத்துப் பாதுகாப்புக் குழு துணைத் தலைவர்களாக பொங்கலூர் நா. பழனிச்சாமி, இ.ஏ.பி.சிவாஜி,
சொத்து பாதுகாப்பு வழக்கறிஞர் பிரிவு தலைவராக வெ.இரவி,
சொத்து பாதுகாப்புக் குழு செயலாளராகத் தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்
சொத்துப் பாதுகாப்புக் குழு உறுப்பினர்களாக ஜெ.கே.கே.எஸ்.மாணிக்கம், குன்னூர் சீனிவாசன், இ.ஜி.சுகவனம், முன்னாள் எம்.பி. அஞ்சுகா மீனாட்சி சுந்தரம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பிரியா

கூடங்குளத்தால் பாதிப்பில்லை: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்!

மூன்று காலகட்ட கதைகளத்தில் ‘பாம்பாட்டம்’!

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *