தமிழ்நாடு அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக பி.எஸ். ராமனை நியமித்து தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா இன்று (ஜனவரி 12) அரசாணை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், அரசின் தலைமை வழக்கறிஞராக ஆர்.சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் தனது பதவியை தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்வதாக கடந்த 10ஆம் தேதி அறிவித்தார்.
இதனால் அடுத்த தலைமை வழக்கறிஞராக யார் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இதுகுறித்து நமது மின்னம்பலத்தில் ஜனவரி 10ஆம் தேதி டிஜிட்டல் திண்ணை: அமைச்சர்களை காப்பாற்ற முடியவில்லை… அரசு வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ராஜினாமா… பின்னணி என்ன? என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டியிருந்தோம்.
அதில், சண்முகசுந்தரத்தின் ராஜினாமா காரணத்தை விரிவாக குறிப்பிட்டிருந்தோம். மேலும் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் தான் தமிழ்நாடு அரசின் அடுத்த அட்வகேட் ஜெனரல் என்றும், ஜனவரி 11ஆம் தேதி 10 மணிக்கு ஏஜியாக அவர் பதவி ஏற்க வாய்ப்புள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தோம்.
ஆனால் அவர் நேற்று பதவியேற்காத நிலையில், இதுகுறித்து திமுக வழக்கறிஞர்கள் இடையே விவாதம் எழுந்தன.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக பி.எஸ். ராமனை நியமித்து தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா இன்று அரசாணை வெளியிட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து நாளை அவர் பதவியேற்க கூடும் என்று வழக்கறிஞர் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
அயலான்ல தனுஷா? : அப்டேட் குமாரு
ஆபாச படங்கள் பார்ப்பது குற்றமல்ல… ஆனால்… : ஐகோர்ட்டு கருத்து!