ராகுலின் சகோதரியாக இருப்பதில் பெருமை… : பிரியங்கா எமொஷனல்!

ராகுல் காந்தியின் சகோதரியாக இருக்க பெருமைப்படுகிறேன் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட இரு தொகுதிகளிலுமே காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெற்றி பெற்றுள்ளார். வயநாடு, ரேபரேலி ஆகிய தொகுதிகளில் அபார வெற்றி பெற்றுள்ளார்.

குறிப்பாக ரேபரேலியில் ராகுலின் வெற்றிக்காக கிட்டத்திட்ட அங்கேயே 15 நாட்களுக்கும் மேல் தங்கி வேலை செய்தார் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், அவரது சகோதரியுமான பிரியங்கா காந்தி.

இந்தநிலையில் ராகுல் வெற்றியை தொடர்ந்து பிரியங்கா காந்தி இன்று (ஜூன் 7) தனது ட்விட்டர் பக்கத்தில், “யார் உங்களை என்ன சொன்னாலும், என்ன செய்தாலும் நீங்கள் பின்வாங்கவே இல்லை. உங்கள் நம்பிக்கையை எவ்வளவு சோதித்தாலும் நீங்கள் அதிலிருந்து பின்வாங்கவில்லை.

நீங்கள் சத்தியத்திற்காக போராடுவதை நிறுத்தவில்லை. அவர்கள் ஒவ்வொரு நாளும் உங்களுக்கு வெறுப்பை பரிசளித்தாலும் கூட, கோபமோ அல்லது வெறுப்புணர்வோ உங்களை வெல்வதற்கு நீங்கள் அனுமதிக்கவில்லை.

உண்மையோடும் அன்போடும் போராடினீர்கள். உங்களை இதுவரை பார்க்க முடியாதவர்கள்… இப்போது பார்க்கிறார்கள். எல்லாவற்றிலும் துணிச்சலாக இருக்கிறீர்கள். ராகுல் காந்தி, உங்களது சகோதரியாக இருப்பதில் பெருமைப்படுகிறேன்” என்று எமோஷனலாக பதிவிட்டுள்ளார்.

பிரியா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

இந்தியா கூட்டணி பாசிசத்தை வீழ்த்தி ஜனநாயகத்தை மீட்கும் – ஸ்டாலின்

எளிய மக்களின் வாழ்வைச் சுவாரஸ்யமாகச் சொன்ன ‘காக்கா முட்டை’

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts