நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்த தடை!

அரசியல்

நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் மற்றும் மத நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை தெரிவிக்க பல்வேறு கட்சியினரும் போராட்டம் நடத்துவது வழக்கம். கடந்த ஆண்டு விவசாயிகள் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட போது அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து நாடாளுமன்றத்துக்கு ட்ராக்டரில் வந்து போராட்டத்தில் ஈடுபட்டார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி.

அதைதொடர்ந்து கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற குளிர்கால கூட்டத்தொடரின் போது, சக எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து திமுக, திருணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி,க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தற்போது வரும் 18ஆம் தேதி மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ளது. இந்நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் தர்ணா, ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களை எம்பிக்கள் நடத்தக்கூடாது என்று தடைவிதிக்கப்பட்டுள்ளது. மத நிகழ்ச்சிகளும் நடத்தக்கூடாது என்றும் நாடாளுமன்ற செயலக பொதுச் செயலாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் என்று நேற்று புதிய பட்டியல் வெளியிடப்பட்டது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்தநிலையில் தற்போது மேலும் ஒரு அறிவிப்பு வெளியானது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.