விலைவாசி உயர்வை கண்டித்து டெல்லியில் போராட்டம் நடத்தி வந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை போலீசார் கைது செய்தனர்.
வேலையில்லாத் திண்டாட்டம், பணவீக்கம் மற்றும் உணவுப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி ஆகிய பிரச்சனைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் இன்று கருப்பு உடை அணிந்து சோனியா காந்தி, ராகுல் காந்தி தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தின் போது அமலாக்கத் துறையினர் செயல்களையும் கண்டித்து காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் கோஷம் எழுப்பினர்.
இந்நிலையில், குடியரசுத் தலைவர் மாளிகைக்கு பேரணியாக செல்ல முயன்ற எதிர்க்கட்சி எம்.பி.க்களை டெல்லி போலீஸ் கைது செய்தது.
ராகுல் காந்தி, சசி தரூர், ப.சிதம்பரம் உள்ளிட்டோரை கைது செய்து வேனில் ஏற்றியது டெல்லி போலீஸ்.
பிரியா
உச்சநீதிமன்றத்தின் 49 வது தலைமை நீதிபதி… யார் இந்த யு.யு.லலித்?