கடலூரில் வளையமா தேவி பகுதியில் விவசாய பயிர்களை அழித்து என்.எல்.சி நிறுவனம் விரிவாக்க பணியைக் கடந்த 3 நாட்களாக செய்து வருகிறது.
இதனைக் கண்டித்து இன்று (ஜூலை 28) நெய்வேலி ஆர்ச்கேட் பகுதியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் வெளியேறு வெளியேறு என்.எல்.சி.யே வெளியேறு, வெளியேற்று… வெளியேற்று… மத்திய, மாநில அரசுகளே என்.எல்.சி. நிர்வாகத்தை உடனடியாக வெளியேற்று என்று கோஷங்களை எழுப்பினர்.
பாமகவினரின் ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து ஐ.ஜி. கண்ணன் தலைமையில் 2 ஆயிரம் போலீசார் நெய்வேலியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் என்.எல்.சி நிறுவனத்துக்குள் நுழைய முயன்றதால் காவல்துறைக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து அன்புமணி ராமதாஸ் உட்படப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் வேனில் அழைத்துச் சென்றனர். அன்புமணியை அழைத்துச் செல்லும் வேனை தடுத்து நிறுத்தி பாமகவினர் தர்ணாவில் ஈடுபட்டுள்ளதால் நெய்வேலி பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.
பிரியா
ஒரே இரவில் கோடீஸ்வரர்களான கேரளாவின் 11 தூய்மை பணியாளர்கள்!
ராமேஸ்வரம் வரும் அமித்ஷா: அதிரடி உத்தரவிட்ட மின் வாரியம்!