அதிமுக மாநாட்டில் நீட் தேர்வுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற முடியுமா என்று எடப்பாடி பழனிசாமிக்கு உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.
இன்று (ஆகஸ்ட் 20) தமிழ்நாடு முழுவதும் திமுக நீட் தேர்வுக்கு எதிராக உண்ணாவிரத போராட்டம் நடத்தியது. மறுபக்கம் அதிமுக மதுரையில் மாநாடு நடத்தியது.
இந்த மாநாட்டில் 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மதுரையில் தீர்மானத்தின் மீது வைகை செல்வம், செம்மலை, விஜயபாஸ்கர் மூன்று பேரும் பேசி கொண்டிருக்கச் சென்னையில் நடைபெற்ற நீட்டுக்கு எதிரான போராட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் நிறைவுரை ஆற்றினார்.
அப்போது அதிமுக மாநாடு குறித்துப் பேசிய உதயநிதி, “இந்த மாநாட்டில், ஒன்றிய பாஜக தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று ஒரே ஒரு தீர்மானங்கள் போடுங்கள் பார்ப்போம். எல்லாரும் சேர்ந்துதான் வாக்குறுதி கொடுத்தோம். எடப்பாடி பழனிசாமி அவர்களே உங்களிடம் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். இதில் நான் அரசியல் செய்ய விரும்பவில்லை.
அதிமுக இளைஞரணி செயலாளரை அனுப்பி வையுங்கள். அனைத்துக் கட்சி பிரதிநிதிகளையும் அழைத்துக்கொள்ளலாம். எல்லோரும் சேர்ந்து டெல்லிக்குச் செல்வோம். பிரதமர் வீடு முன்பு போய் உட்காருவோம்.
அப்படி நீட் தேர்வு ரத்தானால் அதற்கான முழு பொறுப்பையும் நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள். அதிமுகவால் தான் நீட் ரத்தானது என்று நாங்கள் ஒத்துக்கொள்கிறோம். கொஞ்சமாவது வெட்கம், மானம், சூடு, சொரணை இருந்தால் இதைச் செய்யுங்கள். உங்களிடம் இதை எதிர்பார்ப்பது கடினம் தான். ” என்றார்.
பிரியா
பதவியே போனாலும் பரவாயில்லை, Who are You? : உதயநிதியின் வேற லெவல் பேச்சு!
அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் உரிமை தொகை: அதிமுக மாநாட்டில் தீர்மானம்!