தஞ்சையில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று(ஏப்ரல் 24) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பு, முதுகலை, இளநிலை, தொலை நிலைக்கல்வி ஆகிய பிரிவுகளில் மாணவ-மாணவிகளுக்கு கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது.
கடந்த 2019-20, 2020-21, 2021-22, 2022-23 ஆகிய 4 ஆண்டுகளில் படித்தவர்களுக்கு பட்டங்கள் இன்று (ஏப்ரல் 24) வழங்கப்பட்டது.
இந்நிலையில், இன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு 325 பி.எச்டி படிப்பு முடித்தவர்களுக்கும், 723 எம்.பில், 190 முதுகலை மாணவர்கள், 45 இளங்கலை மாணவர்கள், 291 பி.எட் மாணவர்களுக்கும்,தொலைநிலைக் கல்வி மூலம் பயின்ற 11,451 பேருக்கும் பட்டங்களை வழங்க தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தஞ்சாவூர் சென்றார்.
அப்போது தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள பெரியார் சிலை அருகே ஆளுநருக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்த போராட்டத்தில் 70க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
’சினிமா வாழ்க்கை முடிந்துவிட்டது’ : தயாரிப்பாளருக்கு சமந்தா பதில்!