2022-23 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 7.4 சதவீதமாக இருக்கும் என்றும், 2024ஆம் நிதியாண்டிலும் இதே நிலை தொடரும் என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
‘தி ஃபைனான்சியல் எக்ஸ்பிரஸ் நடத்திய இந்தியாவின் சிறந்த வங்கி விருதுகள் 2022′ நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (ஆகஸ்ட் 26 ) கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர், “இந்த நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.4% வளர்ச்சியடையும் மற்றும் அடுத்த ஆண்டில் இதே நிலை தொடரும்” என்றார்.

இலவசங்கள் குறித்து பேசிய அவர், “தேர்தல் நேரத்தில் இலவசங்கள் தருவதாக மக்களுக்கு வாக்குறுதி அளித்தால், அதை நிறைவேற்றும் வகையில் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
இலவசம் என்ற வாக்குறுதியை மற்றவர் மீது சுமத்த கூடாது” என கூறினார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
277 எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கிய பாஜக : கெஜ்ரிவால் குற்றச்சாட்டு!
Comments are closed.