திமுக முன்னாள் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் அண்ணா அறிவாலயத்தில் புகைப்படக்கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.
திமுக முன்னாள் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி திமுக சார்பில் பல்வேறு திட்டங்கள், நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு பிறந்தநாள் விழா சிறப்பு புகைப்படக் கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.
இந்த கண்காட்சி இன்று(டிசம்பர் 17) தொடங்கி 3 நாட்கள் நடைபெற இருக்கிறது. இதனை திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்திருக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் திமுகவின் மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
பேராசிரியர் அன்பழகனின் ஆரம்பகால போராட்டம் தொடங்கி அவரது வாழ்நாளில் கட்சிக்கு அவர் ஆற்றியப் பணிகள், அவரது செயல்பாடுகள், அண்ணா, கலைஞருடன் அவருக்கு இருந்த நட்பு போன்றவற்றை தற்போதைய தலைமுறையினரும், திமுக தொண்டர்களும் தெரிந்து கொள்ளும் வகையில் புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
திமுக மூத்த தலைவர் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நினைவைப் போற்றும் வகையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை செயல்படும் டிபிஐ வளாகத்தில் அவரது திருவுருவச் சிலை நிறுவப்பட்டு அந்த வளாகம் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம் என அழைக்கப்படும் என்றும் சிறந்த பள்ளிகளுக்கு பேராசிரியர் பெயரில் விருது வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
கலை.ரா
தீரன் பட பாணி: வட இந்தியாவில் கெத்து காட்டிய தமிழக போலீஸ்!
நெய்யைத் தொடர்ந்து வெண்ணெய் விலையும் உயர்வு!