இந்திய ஒற்றுமை யாத்திரையில் ராகுல் காந்தியுடன், பிரியங்கா காந்தியும் இணையவுள்ளார்.
இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் கன்னியாகுமரியில் கடந்த செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு எம்.பி யுமான ராகுல் காந்தி பாதயாத்திரையை தொடங்கினார்.
தமிழ்நாடு,கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் நடைபயணம் மேற்கொண்டார்.
குஜராத் மாநிலத்தில் இந்த நடைபயணம் நேற்று (நவம்பர் 21 ) முடிவடைந்த நிலையில், நாளை (நவம்பர் 23 ) மத்தியப் பிரதேசத்தில் தனது பாதயாத்திரையை ராகுல் காந்தி தொடங்கவிருக்கிறார்.
ராகுல் காந்தி நாளை மத்திய பிரதேசத்தில் நுழையும்போது பாதயாத்திரையில் உத்தரப் பிரதேச மாநில பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இணைந்து கொள்வார் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் எம்.பி.யுமான ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று (நவம்பர் 22) வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் ”பிரியங்கா காந்தி இந்த யாத்திரையில் கலந்துகொண்டு தொடர்ந்து நான்கு நாட்கள் பங்கேற்பார்” என்று கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
மேகதாது விவகாரம்: தமிழக அரசு இன்று பதில் மனுத் தாக்கல்!
அடுத்த இரண்டு நாட்களுக்கு எந்தெந்த மாவட்டங்களில் மழை?