ஒற்றுமை யாத்திரை: ராகுலுடன் இணைந்த பிரியங்கா

அரசியல்

இந்திய ஒற்றுமை யாத்திரையில் ராகுல் காந்தியுடன், பிரியங்கா காந்தி இன்று (நவம்பர் 24) இணைந்துள்ளார்.

இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் கன்னியாகுமரியில் கடந்த செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு எம்.பியுமான ராகுல் காந்தி பாதயாத்திரையை தொடங்கினார்.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் நடைப்பயணம் மேற்கொண்டார்.

கடைசியாக குஜராத் பயணம் முடிவடைந்த நிலையில், நேற்று காலை (நவம்பர் 23 ) மத்தியப் பிரதேச எல்லையை ஒட்டிய மராட்டிய மாநில பகுதியில் இருந்து பாதயாத்திரை தொடங்கியது.

priyanka gandhi joined rahul gandhi walk madhya pradesh

இருமாநில எல்லையில் உள்ள போடர்லி என்ற கிராமம் வழியாக மத்தியப் பிரதேசத்துக்குள் நடைப்பயணம் மேற்கொண்டார். மத்தியப் பிரதேசம் வந்த ராகுல்காந்திக்கு, காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மத்தியப் பிரதேசத்தில், ராகுல்காந்தி 12 நாட்கள் பாதயாத்திரை மேற்கொள்ள இருக்கிறார்.

priyanka gandhi joined rahul gandhi walk madhya pradesh

அங்கு 380 கி.மீ. தூரம் நடைப்பயணம் செல்ல இருக்கிறார். இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் பாரத் ஜோடோ யாத்திரை மத்தியப் பிரதேச மாநிலம் போர்கானில் இருந்து இன்று (நவம்பர் 24) மீண்டும் தொடங்கியது.

இந்த யாத்திரையில் ராகுல் காந்தியுடன், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் அவரது கணவர் ராபர்ட் வதோரா ஆகியோர் இணைந்து நடைப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பிரியங்கா காந்தி மகன் ரைஹான் வத்ராவும் யாத்திரையில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

ஏகேவை சந்தித்த எஸ்கே: ஏன் தெரியுமா?

திமுக, பாஜகவைத் தொடர்ந்து விசிக: திருமாவிடம் கொதித்த பெண் நிர்வாகி!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *