“அரசை விட தனியார் நிறுவனங்கள் நல்ல சம்பளம் தரும்” – உதயநிதி ஸ்டாலின்

அரசியல்

அரசை விட  தனியார் நிறுவனங்களில் அதிக ஊதியம் தரப்படுவதாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மாவட்ட அளவிலான தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் தொடக்கம் மற்றும் 113 சுய உதவி குழுக்களுக்கு 8.61 கோடி வங்கி கடன், சமத்துவபுரத்தில் வீடு வழங்குவது உள்ளிட்ட நிகழ்ச்சிகளில், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  கலந்து கொண்டார்.

95 முன்னணி தனியார் நிறுவனங்களின் வேலை வாய்ப்பு முகாமை தொடங்கி வைத்து பேசிய அவர், “அமைச்சராகி பொறுப்பேற்று நடைபெறும் முதல் வேலை வாய்ப்பு முகாம். இதில் கலந்து கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

திமுக அரசு பொறுப்பேற்று இதுபோன்ற வேலை வாய்ப்பு முகாம்கள் மூலம் முதல்வர் அறிவுறுத்தலின் பேரில் ஒன்றரை ஆண்டுகளில் ஒரு லட்சத்து 52 ஆயிரம் பேருக்கு இந்த அரசு வேலை வாய்ப்பு வழங்கியுள்ளது.

அரசின் வேலைவாய்ப்பு திட்டத்தை தெரிந்து கொண்டு இளைஞர்கள் பயன்பெற வேண்டும். அதே சமயம், அரசு மட்டுமே பணி வாய்ப்பு வழங்க முடியாது.

அதனால் தனியார் நிறுவனங்களின் வேலை வாய்ப்பை படித்த இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அரசு வேலையைவிட தனியார் நிறுவனங்களில் அதிக ஊதியம் தரப்படுகிறது”என்றார்.

மேலும் சிவகங்கை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட உதயநிதி, முதலாவதாக காரைக்குடி கண்ணதாசன் மணி மண்டபத்தில் நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில்,  கலைஞர் நகர மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 1 கோடியே 85 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அறிவு சார் மையத்தை பார்வையிட்டார்.

இதைத்தொடர்ந்து சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சிறுகூடல் பட்டியில் பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் பயனாளிகளுக்கு வீடுகளை வழங்க வருகை தந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

அங்குள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த பின்னர் பயனாளிகள் நான்கு பேருக்கு அவர் வீடுகளை வழங்கினார்.

மேலும் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் ஓக்கூரில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் 4 கோடியே 51 லட்ச ரூபாய் செலவில் 24 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. தனி வீடுகள் மற்றும் 4 வீடுகள் கொண்ட குடியிருப்புகள் கட்டுமான பணியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார்.

கலை.ரா

சுலபமான இலக்கு: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா

”ராகுலின் யாத்திரை அடுத்து வரும் ஒளிமயமான தலைமுறைக்கானது!” – கமல்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0