இந்தியாவின் பெயரை பாரத் என பெயர் மாற்றம் செய்து குடியரசு தலைவர் மாளிகை பயன்படுத்தியிருப்பது நாடு முழுவதும் மிக முக்கியமான பேசுபொருளாகியுள்ள நிலையில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ள நிகழ்ச்சியின் பெயரில் இந்தியாவுக்கு பதிலாக பாரத் என இடம்பெற்றுள்ளது.
செப்டம்பர் 9-ஆம் தேதி ஜி20 உச்சி மாநாட்டை முன்னிட்டு டின்னருக்கான அழைப்பிதழ் எம்.பிக்கள் உள்பட பலருக்கும் குடியரசு தலைவர் மாளிகையிலிருந்து அனுப்பப்பட்டுள்ளது.
குடியரசு தலைவர் மாளிகையிலிருந்து அனுப்பப்படும் அழைப்பிதழ்களில் The President Of India என்ற பெயர் தான் இடம்பெற்றிருக்கும்.
ஆனால் ஜி20 அழைப்பிதழில் The President Of Bharat என்ற பெயர் இடம்பெற்றுள்ளது. இது நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
செப்டம்பர் 18-ஆம் தேதி கூட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தில் இந்தியாவின் பெயரை பாரத் என்று மாற்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்தநிலையில் இந்தோனேஷியாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ள நிகழ்ச்சியின் பெயரில் இந்தியாவுக்கு பதிலாக பாரத் என இடம்பெற்றுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி இன்று இந்தோனேசியாவின் ஜகார்த்தாவுக்குச் செல்கிறார். அங்கு இந்தோனேசியா நடத்தும் 20வது ஆசியான்-இந்தியா உச்சி மாநாடு மற்றும் 18வது கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்கிறார். இந்தநிலையில் ஆசியான் மாநாட்டு நிகழ்ச்சி குறிப்பேட்டில் பாரத் என குறிப்பிடப்பட்டுள்ளது.
குடியரசு தலைவர் மாளிகையிலிருந்து அனுப்பப்படும் அழைப்பிதழில் இந்தியாவிற்கு பதிலாக பாரத் என்ற பெயர் இடம்பெற்றிருந்த நிலையில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ள நிகழ்ச்சி நிரலிலும் பாரத் என்று குறிப்பிடப்பட்டுள்ளது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
செல்வம்
அடுத்த 5 நாட்களுக்கு… மழை பிச்சு எடுக்க போகுது!
இரண்டு நாட்களில் முட்டை விலை 30 காசுகள் உயர்வு!
டிஜிட்டல் திண்ணை: கனிமொழி… உதயநிதி…: யாரை, யார் புறக்கணித்தது? தெக்கத்தி திமுக புயல்!
செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வது சரியா? – சரவணன் பதில்!