ஆசமனம், பவித்ரம்: ராமர் சிலையை பிரதிஷ்டை செய்த மோடி

Published On:

| By Aara

Pran Pratishtha ceremony Ayodhya

பிரதமர் மோடி அயோத்தியில் அமைக்கப்பட்டுள்ள பால ராமர் கோயிலுக்கு இன்று (ஜனவரி 22) காலை 12 மணியளவில் வந்தார். Pran Pratishtha ceremony Ayodhya

கையில் பூஜை பொருட்கள் அடங்கிய வெல்வெட் பட்டு போர்த்தப்பட்ட வெள்ளித் தட்டோடு மெதுவாக நடந்து வந்தார் பிரதமர் மோடி.

மண்டபங்களைத் தாண்டி அவர் கோயிலின் உட்பகுதிக்குள் வந்த நிலையில் உ,பி. ஆளுநர் ஆனந்தி பென், முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் ஆகியோர் மோடியோடு சேர்ந்துகொண்டனர்.

Pran Pratishtha ceremony Ayodhya

மோடியிடம் இருந்து பூஜைத் தட்டை பூஜை செய்யும் ஆச்சரியார் பெற்றுக் கொண்டார். அதன் பின் மோடியும் அவர் அருகே மோகன் பகவத்தும் புதிய ராமர் சிலையின் எதிரே அமர்ந்து சடங்குகளை செய்ய ஆரம்பித்தனர்.

முதலில் பஞ்ச பாத்திரங்களில் புனித நீர் நிரப்பப்பட்டது. பக்தியோடு அமர்ந்த மோடிக்கு ஆசமனம் செய்து வைக்கப்பட்டது.

அதாவது ஒவ்வொரு வழிபாட்டையும் சடங்கையும் தொடங்கும்போது நம்மை சுத்தப்படுத்திக் கொள்வதற்கான சடங்கே ஆசமனம் எனப்படுவதாகும்.

மூன்று முறை தீர்த்தத்தை அருந்திய மோடி அச்சுதாய நமஹா, அனந்தாய நமஹோ, கோவிந்தாய நமஹா என்று வரிசையாக விஷ்ணுவின் நாமங்களை ஜெபித்து ஆசமனம் செய்தார்.

Pran Pratishtha ceremony Ayodhya

அதன்பின் மோடியின் வலது கை மோதிர விரலில் பவித்ரம் எனப்படும் தர்ப்பை புல்லால் ஆன மோதிரம் அணிவிக்கப்பட்டது.

ஒவ்வொரு சடங்கை செய்யும்போதும் இந்த பவித்ரம் அணிந்துகொள்ளவேண்டியது சம்பிரதாய கட்டாயம்.

அதன்படியே பவித்ரம் அணிந்துகொண்டு சங்கல்பம் என்ற உறுதிமொழியை சமஸ்கிருத மொழியில் கோயில் அர்ச்சகர் சொல்லச் சொல்ல திரும்பச் சொன்னார் மோடி.

Pran Pratishtha ceremony Ayodhya

இதன் பின் முக்கிய பூஜைகள் நடத்தப்பட்டன. பத்து நிமிட பூஜைகளின் போது ராமர் எதிரே நின்று கைகளை உள்பக்கமாக குவித்தபடி பணிந்து நின்றார் மோடி.

இதன் பின் பிரதிஷ்டைக்கான சடங்குளைத் தொடங்கினார்கள் ஆச்சாரியர்கள். அதன் பின் 12.30க்கு மேல்  பால ராமர் சிலை முறைப்படி பிரதிஷ்டை செய்யப்பட்டது, அதாவது நிறுவப்பட்டது. அதன் பின் மோடி துளசி உள்ளிட்ட பூஜை பொருட்களால் ராமருக்கு அர்ச்சனை செய்தார்.

வேந்தன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

”என்னை மன்னித்து விடுங்கள்” பிக்பாஸ் ஐஷு உருக்கம்!

ராமர் சிறப்பு பூஜை:  கோயிலில் மணியடித்த இஸ்ரேல் தூதர்

Pran Pratishtha ceremony Ayodhya

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel